Jul 29, 2010
Jul 28, 2010
டைட்டானிக்
டைட்டானிக்கில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில் கடைசி நபர நூறு வயது பாட்டி ரோஸ் டிவிட் புகேடர்
Jul 27, 2010
Jul 26, 2010
பூமியைப் போன்ற 140 கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்
இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.
நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள இந்த exoplanets என்றழைக்கப்படும் சூரிய மண்டலங்களில் உள்ள 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே உள்ளன. உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்காலம் என்று கருதப்படுகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரத்திங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளி்க் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.
இந்த கெப்லர் விண்கலம் ஓராண்டுக்கு முன் ஏவப்பட்டது. ஆனால், கடந்த மாத மத்தியில் தான் பால்வெளி மண்டத்தின் பகுதியை எட்டிப் பிடித்து தனது ஆய்வைத் தொடங்கியது.
பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நடத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்து, பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7b மற்றும் Wasp-17b ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7b பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17bயின் விட்டம் 2 லட்சம் கி.மீயாகும் (பூமியின் விட்டம் 12,000 கி.மீ தான்).
நமக்கு பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஜோகானஸ் கெப்லரின் மூன்றாவது விதியின் அடிப்படையில் தான் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் தான் இதற்கு கெப்லர் வி்ண்கலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கணித மேதை, கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும், கிரகங்களின் இயக்கம் குறித்த கணக்கீட்டை 1960களில் தனது 3 விதிகளில் அடக்கிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jul 23, 2010
விமானத்தை விடவும் வேகமாக ஒரு கார் !
2012ம் ஆண்டில் விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார் பரீட்சார்த்தம் பார்க்கப்படும் என அறிய வருகிறது. இங்கிலாந்துக்காரர் தலைமையில், ஒரு குழு இதன் முன் முயற்சியாக மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி பரீட்சார்த்தம் பாரத்திருந்தனர். ஜெட் விமான என்ஜினைக் கொண்டு, “பால்கான்” ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்தக் கார் விமானத்தை விட வேகமாக மணிக்கு 1600 கிலோ மீட்டருக்குமான வேகத்தில் செல்லும். சுருக்கமாகச் சொல்லின் பார்முலா-1 கார் பந்தயத்துக்கு பயன்படுத்திய காரை விட 180 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். ஆய்வுபணிகள் முடிந்து வடிமைக்கும் பணி தொடங்கியிருக்கும் இந்தக் கார் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைறிய பின், 2012-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சோதனை ஓட்டம் நடைபெறுமெனவும் தெரியவருகிறது...4tamil... |
Cylinder's expiry date
Have U ever heard about LPG gas cylinder's expiry date....!!
Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard, please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor.
Here is how we can check the expiry of LPG cylinders:
On one of three side stems of the cylinder, the expiry date is coded alpha numerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06.
The alphabets stand for quarters -
1. A for March (First Qtr),
2. B for June (Second Qtr),
3. C for Sept (Third Qtr),
4. D for December (Fourth Qtr).
The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006.
Please Return Back the Cylinder that you get with a Expiry Date, they are prone to Leak and other Hazardous accidents ...
The second example with D13 allows the cylinder to be in use until Dec 2013 .
Kindly pass this to every one, and create awareness among the public.
Jul 22, 2010
அழிந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகள்
இந்த மையம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செல்போன் கோபுரங்களாலும், பிற காரணங்களாலும் குருவிகள் இனம் அடியோடு அழிந்து வருவதாக கூறியுள்ளது.
கடந்த 2008-2009 ல் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் படி கேரளத்தில் குருவிகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கொல்லத்தில் உள்ள எஸ்.என் கல்லூரி விலங்கியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் சயீனுதின் -Tnks Thatstamil
நிக் லீ
பிளாஸ் லைட் என்ற அப்ளிகேஷன் ஐபோனின் ஸ்கீரினை விரும்பிய வர்ணத்தில் மாற்றி வைத்திருக்க உதவுவதாகும். இதை தயாரித்து 0.99 டாலர்களுக்கு ஆப்பிள் ஸ்டோரில் விற்பனை செய்து வந்தான் நிக் லீ.
இது ஒரு சாதாரண அப்ளிகேஷன் தான் என ஆப்பிள் நிறுவனமும் இதை விற்பனை செய்ய முதலில் அனுமதித்தது. பின்னர் நிக், ஐபோனில் இணையத்தை இலவசமாக உபயோகிக்க உதவுவதற்காக அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கோடிங்க் பற்றி அறிவித்ததும் பிளாஸ்லைட்டின் விற்பனை பன்மடங்கு அதிகரித்தது.
விழித்துக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் அதன் விற்பனையை உடனடியாக தடைசெய்தது.
ஏனெனில் கணனியுடன் சேர்த்து இணையத்தை உபயோகிக்க மேலதிகமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 20 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த விதிமுறையை உடைத்து தனது திறமையில் இலவச இணைய சேவையை ஏற்படுத்தி அதை ஆப்பிள் நிறுவன ஆன்லைன் ஸ்டோரிலேயே விற்பனை செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை அதை வாங்க முந்திக் கொண்டவர்கள் இலவசமாக இணையத்தை பயன்படுத்துவார்கள். - Tnks 4tamil
Jul 21, 2010
சிங்கப்பூரில்...
சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் 4 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். இது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர் எண்ணிக்கையில் 25 சதவீதமாகும்.
இரு ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தது. இது இப்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதில் தென் மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களே அதிகம். அதிலும் தமிழர்கள்தான் அதிகம்.
இவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் கட்டுமானப் பணி, துறைமுகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வேலைகளில் உள்ளனர்.
அங்கு சாப்ட்வேர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள், வங்கி-நிதித்துறையில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது.
சாப்ட்வேர், நிதித்துறையில் சொந்தமாத தொழில் நிறுவனம் நடத்தி வரும் இந்தியர்கள் எண்ணிக்கை 3,000 மட்டுமே.
சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவை அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Thanks - Thatstamil
முத்தையா முரளிதரன்
Thanks - 4தமிழ்மீடியா
2010 ஜூலை 18-அன்று துவங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டு ஆட்டத்துடன் முத்தையா முரளிதரன் விடைபெறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் இப்படியான ஒரு தனிநபர் திறமையை தனது நிலைப்புக்காக நம்பி இருந்ததில்லை. இந்திய அணிக்கு டெண்டுல்கர், கும்பிளே, ஆஸ்திரேலியாவுக்கு பாண்டிங், வார்னே, மேற்கிந்திய தீவுகளுக்கு லாரா, ஆம்புரோஸ், வால்ஷ் போன்ற அதிமனிதர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் நின்று ஆடியுள்ள போதிலும் முத்தையா முரளிதரன் அளவுக்கு யாரும் அனாயசமாகவும் எண்ணிக்கையிலும் ஆட்டங்களை வென்று தந்ததில்லை.
தனிப்பட்ட ஒழுங்கீன பிரச்சனைகள், ஆடுகள சச்சரவுகள், அணிபிளவு அரசியல், நிர்வாக எதிர்ப்பு போன்று எந்த களங்கமமும் அற்ற ஆட்டவரலாற்றை பொறுத்த வரையில் முரளிதரனுடன் ஒப்பிடத்தக்க நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. ஆஸ்திரேலியாவின் ஆண்டுரூ சைமண்ட்ஸை ஹர்பஜன் இனஅவதூறு செய்த போது அவரை காப்பாற்ற விசாரணைக் குழுவின் தலைமை நீதிபதி முன்பு சச்சின் பொய் சொன்னார் என்றொரு முக்கிய குற்றச்சாட்டு இன்றும் சொல்லப்படுகிறது. அஸருதீன், திராவிட் ஆகியோரின் தலைமையின் கீழ் மத்திய மட்டை வரிசையில் ஆட விருப்பமில்லாத நிலையில், அணி நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ள பட்ட போதெல்லாம் சச்சின் மிகுந்த தயக்கத்துடன் தனது ஆளுமைக்கு மாறுபட்ட முறையில் ஆடியுள்ளார். அணி நிர்வாகத்துடன் இப்படியான முரண்பாடுகள் ஏற்படும் போது சச்சின் தனது நத்தைக் கூட்டுக்குள் முடங்கி விடுவார். ஆனால் முரளிதரனிடம் இத்தகைய தன்னலக் கீற்றுகளை காண முடியாது. முரளியை அவரது அணியின் சகவீரர்களுடன் ஒப்பிடுவது மேலும் நியாயமானதாகவும் அதிக வெளிச்சம் தருவதாகவும் இருக்கும்.
நாற்பது வயதில் ஜெயசூரியாவின் ஆட்டத்திறன் பழுதடைந்த கனரக வாகனம் போல் இடையறாது கசிந்து கொண்டிருந்தது. அணியின் தலைவர், மூத்த வீரர்கள், நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் அவரது சுயேச்சையான ஓய்வை ஆவலாதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தொடர்ச்சியாக ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்து வரும் நிலையிலும் ஜெயசூரியா விடைபெற மறுத்தார். அவரை போற்றி, கொண்டாடிய மக்கள் தூற்றி வெறுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தேர்வாளர்கள் அவரை அணியில் இருந்து விலக்க, ஜெயசூரியா ராஜபக்சேவை சந்தித்து பரிந்துரை வாங்க முயன்றார். பின்னர் தோல்வியின் விளிம்பில் அனைத்தையும் பணயம் வைத்து இழந்த நிலையில் ஜெயசூரியா இந்தியாவில் ஐ.பி.எல் ஆடியபடியே இலங்கையில் தேர்தலில் நின்று வென்றார்.
இந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அடுத்து வந்த 2010 T20 உலகக் கோப்பைக்கான அணியில் இடத்தை உறுதி செய்தார். தொடர்ச்சியாக குறைவான ஓட்டங்களே எடுத்தாலும் T20 வழமைக்கு மாறாக அனைத்து ஆட்டங்களிலும் இடம் பெற்றார். இத்தொடரை வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்ததற்கு ஒரு எம்.பியை எல்லா ஆட்டங்களிலும் ஆட வைப்பதற்கான கட்டாயமும் ஒரு காரணமாக அமைந்தது. இலங்கை ஒருநாள் ஆட்டவரலாற்றை புத்துருவாக்கியவர் என்றாலும் அவரது இறுதிப் பக்கங்கள் கசப்பினாலும் வெறுப்பினாலும் எழுதப்பட்டிருந்தது. இலங்கையினர் எவ்வளவு கசப்படைந்து உள்ளனர் என்றால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஜெயசூரியாவை தூக்கி விட்டனர். நடந்து வரும் டெஸ்டோடு விடைபெறும் முரளியை சேர்த்துள்ளனர். ஜெயசூரியாவைப் போல் வேறெந்த கிரிக்கெட் நாயகனும் தனது வாரியத்திடம் இப்படியொரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியது இல்லை.
மஹிளா ஜெயவர்த்தனேவின் ஆட்டவாழ்வு கிளம்பி புகைவிட இலங்கை வாரியமும் தேர்வாளர்களும் நிறைய உந்தி தள்ள வேண்டியிருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் அணிக்குள் கொண்டு வரப்பட்ட மஹிளா தொடர்ச்சியாக ஏமாற்றமளித்தார். அபரிதமான திறமை கொண்ட ஊதாரியான மட்டையாளராக விமர்சகர்கள் அவரை சித்தரித்தனர். துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார். தனது ஆட்டவாழ்வின் பிற்பாதியில் தான், குறிப்பாக அணித்தலைவராக செயல்பட்ட போது, ஜெயவர்த்தனே விழித்துக் கொண்டு சிறப்பாக மட்டையாட ஆரம்பித்தார். மற்றொரு முன்னணி வீரரான மார்வன் அட்டப்பட்டுவின் ஆட்ட்வாழ்வின் கடைசி கட்டம் கறை படிந்ததாக இருந்தது. 2007 உலகக் கோப்பைக்காக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் இந்த முன்னாள் தலைவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்பட இல்லை. இதை தனக்கு நேர்ந்த அவமதிப்பாக கருதி அட்டப்பட்டு ஓய்வு பெற்று விலகிக் கொண்டார்.
இந்தியாவில் கங்குலியின் கீழ் கும்பிளே இப்படியான கடுமையான உதாசீனத்துக்கு ஆளானார். ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை; மேற்கிந்திய பயணத்தில் உடைந்த மோவாயுடன் பந்து வீசி தன் அணியுணர்வை, மனவலிமையை கங்குலிக்கு நிரூபித்தார். இலங்கை அணிக்கு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு வகைகளில் பங்காற்றிய பெரும் திறமைசாலிகள் இருந்துள்ளனர். ஆனால் பதினெட்டு வருடங்களாக தன்னலமற்று, தீவிர அணியுணர்வுடன் யாரும் இப்படி நிலைத்ததில்லை;
இலங்கை அணியில் மட்டுமல்ல, உலகமெங்கும், தொடர்ச்சியாக (இரண்டு இன்னிங்சிலுமாய்) சுமார் நூறு ஓவர்களை ஒவ்வொரு ஆட்டத்திலும் வீசும் சுமையை, தனிப்பட்ட வெற்றிகளைக் கொண்டு அணியின் பலவீனத்தை மறைக்கும் பொறுப்பை ஏற்றதும், நெடுங்காலம் தன்னலமற்று உழைத்து விட்டு அணி ஸ்திரத்தன்மை அடைந்த நிலையில் தனது வலிமை குன்றியதும், சுயமாக விலக முடிவு செய்ததும் முரளிதரன் ஒருவர் மட்டும் தான். இத்தகைய நீட்சியும், தன்னலமற்ற் ஈடுபாடும் சச்சினிடம் காணப்பட்டாலும் அவர் முரளி அளவுக்கு ஆட்டங்களை தனது அணிக்கு வென்று அளித்ததில்லை. டெஸ்டில் கிட்டத்தட்ட எண்ணூறு விக்கெட்டுகள், அனைத்து அணிகளுக்கு எதிராக ஒருமுறையாவது பத்து விக்கெட்டுகள் போன்று வியப்பிலாழ்த்தும் சாதனை விபரங்கள் மட்டுமல்ல, முரளியின் ஆளுமையே மிக தனித்துவமாகனதாகவும், யாராலும் ஈயடிக்க முடியாததாகவுமே இருந்து வருகிறது. விக்கெட் எண்ணிக்கையை விட தனது அணியின் கால்தசைகள் வலுவடையும் வரை அதை தோளில் தூக்கி நின்று வெகுதூரம் அழைத்து சென்றவர் என்பதே அவரது ஆக முக்கியமான தகுதியாக எதிர்காலம் கருதும்.
முரளி ஓய்வு பெறும் இவ்வேளையில் பொதுவாக இரண்டு எதிர்மறை விமர்சனங்கள் தோண்டியெடுத்து மினுக்கப்படுகின்றன. ஒன்று, அவரது பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பானது என்பது; அடுத்து வார்னேயுடன் ஒப்பீடு. முரளியின் முழங்கை பிறவியில் இருந்தே சற்று வளைந்தது என்பதால் அவர் பந்து வீசும் போது எறிவதான் தோற்றம் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் இதை ஒருவித பார்வை மயக்கம் என்கிறார்கள். அதாவது நமது மனிதக்கண்களால் பார்க்கப்பட்டு தெரிவது பொருளொன்றின் ரெட்டை பரிமாணத் தோற்றம் மட்டுமே. மூளை இதற்கு மசாலா சேர்த்து முப்பரிமாணம் ஆக்குகிறது. நாம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல.
முரளி நான்கு முறை அறிவியல் சோதனைகள் மூலம் தந்து வீச்சு முறைமையின் தூய்மையை நிறுவி விட்டார். கையை கட்டுப்படுத்தும் பிரேஸ் எனும் உலோகக் கருவியை அணிந்து பந்து வீசிக் காண்பித்தார். பிரேஸ் முழங்கையை வளைக்க விடாது. இவ்வாறு வளைக்காமலே படக்கருவி முன்னிலையில் முரளி தனது வழக்கமான பந்துகளை அதே திருப்பத்துடன் வீசி காண்பித்தார். ஆனால் கண்களை மட்டுமே நம்பும் முன்னாள் வீரர்களும், விமர்சாகர்களும் தொடர்ந்து முரளியை சந்தேகிக்கின்றனர். பிராட்மேன், ஸ்டீவ் வாஹ் ஆகியோரைத் தவிர்த்து ஆஸ்திரேலிய மண்ணின் பிரதமர், நடுவர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட்டு அந்த மண்ணின் வாயுள்ள ஒவ்வொரு உயிரும் பெரும் துவேசத்துடன் அவரை ”பந்தை எறிபவன்” என்று கிடைக்கிற அவகாசத்தில் எல்லாம் குற்றம் சாட்ட முயன்று வருகிறார்கள். இத்தனைக்கும் உலகின் பந்து வீச்சாளர்களில் தொண்ணூறு சதவீதத்தினர் ஒரு குறிப்பிட்ட கோணத்துக்குள் பந்தை எறிபவர்கள் தாம் என்று ஒரு விஞ்ஞான ஆய்வு நிரூபித்தது.
இந்த எறிபந்தாளர்களில் ஆஸி அணியின் பிரட் லீயும் அடக்கம். மேலும் முரளிதரனின் பந்து வீச்சு முறையை ஆய்ந்து பத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இவை அவரது வீசும் பாங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டது தான் என்று சான்று பகர்ந்தன. இந்த ஆய்வு முடிவுகளால் தூண்டப்பட்டு ஐ.சி.சி 15 டிகிரி கோணத்துக்குள் முழங்கையை வளைக்கலாம் என்று புதுச் சட்டம் கொண்டு வந்தது; இதனால் முரளியின் வீச்சு பாங்கு விதிமுறைக்கு உடபட்டது தான் என்று அறிவித்தது. ஆனாலும் பல ஆஸிகளும், பிற வெள்ளையர்களும் இந்த புது விதிமுறையை நிராகரித்து, முரளியை எறிபந்தாளர் என்று அடையாளப்படுத்துவதில் விடாப்பிடியாக உள்ளனர். ஷேன் வார்ன் முரளிதரனை பற்றி ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு எழுதிய பத்திரிகையில் அவரது வீச்சுமுறை ”கிட்டத்தட்ட தூய்மையானது” என்று சோற்றுக்குள் மூடி மறைத்தே பாராட்டி உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் பத்தியாளர் பீட்டர் ரோபோக் ”In a freakish league of his own” என்ற் கட்டுரையில் இயற்கைக்கு மாறான வினோத பந்து வீச்சாளர்களின் வரிசையில் முரளிதரனை சேர்க்கிறார்; வார்னை எளிய பந்துவீச்சை மார்க்கத்தை ஒரு கலையாக மாற்றி சாதனையாளர் எனும் பீட்டர் ரீபோக் முரளி மையநீரோட்டத்தை சேர்ந்த மரபான பந்து வீச்சாளர் அல்ல என்கிறார். ஊனக்கை இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு மரபுக்குள் இடமில்லை என்பது ரீபோக்கின் அணுகுமுறை. இதே தர்க்கத்தை நல்லவேளை நாம் பீத்தோவனுக்கும், மில்டனுக்கும், பயன்படுத்துவது இல்லை. இவர் அடுத்து முரளிதரன் வார்னை போன்று ஆவேசமாக, துடிக்குத்தன வெறுப்பேற்றல்களின்றி ஒருவித மென்மையான பொறுமையுடன், பவ்யத்துடன் ஆடியதை குறையாக சொல்கிறார். தனிப்பட்ட திறமை வெளிப்பாடுகளால் குறுகிய நேரத்தில் அவரால் ஆட்டத்தின் போக்கை திருப்ப முடிந்ததில்லை என்று வேறு தகவல்பிழையான ஒரு அவதானிப்பை செய்கிறார். 132 ஆட்டங்களில் முரளி 66 தடவை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் ஒரு ஆட்டத்தில் வீழ்த்தி உள்ளார்.
இதன் பொருள் தான் ஆடிய பாதிக்கு மேலான ஆட்டங்களில் முரளி எதிரணி விக்கெட்டுகளில் பாதிக்கு மேல் கொய்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது. மேலும் சுருக்கமாக, இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் முரளி வெற்றிக்கான கருவியாக இருக்கிறார். இதை விட ஆபத்தான ஒரு பந்து வீச்சாளர் இருக்க முடியுமா? முரளியையும் வார்னையும் ஒப்பிடுவது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தமிழக மக்களுக்கு ஏற்படும் குழப்பததை போன்றது. முரளியிடம் ஆவேச அணுகுமுறை இல்லையென்பது அசோகமித்திரன் எழுத்தில் வன்முறை இல்லை என்று சு. ரா சொன்னது போன்றது. ஆரம்பத்தில் சந்தேகித்தாலும், அறிவியல் ஆதாரம் கிடைத்த பின்னர் மேற்கிந்திய தீவு முன்னாள் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் முரளியின் பந்துவீச்சு ஐயத்துக்கு அப்பாலானது என்று ஆதரவளித்தார். இங்கிலாந்தின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆங்குஸ் பிரேசரும் இந்த ஆதரவு முகாமை சேர்ந்தவரே. பிராட்மேனே பாராட்டிய பின்னரும் கூட தொடர்ந்து முரளியின் மென்னியை நெறிப்பதற்கு ஆஸ்திரேலிய விரல்களே அதிகம் நெளிவதற்கு அவர் வார்னின் சாதனையை விஞ்சி விட்ட பொறாமையும், எரிச்சலும் முக்கிய காரணங்கள். ஆஸ்திரேலியர்கள் ”மோசமான தோல்வியாளர்கள்” என்ற அடைமொழி உலகப் பிரபலமானது; தொடர்ந்து அவர்களாலேயே இலவசமாக நிரூபிக்கப்பட்டு வருவது.
அடுத்த நூறு வருடங்களுக்கு முரளியின் சாதனை வரலாற்றின் புள்ளியல் விபரங்களும், விக்கெட்டுகளின் சிகரமும் அவரது வீச்சுமுறைமை பற்றிய சர்ச்சையுடன் நினைவில் வெம்மை தணியாமல் இருக்கும். அவரது விக்கெட் சாதனை யாராலும் முறியடிக்கப் படாமல் போனாலும் அதனை இந்த சர்ச்சை ஒன்றே அர்த்தமற்றதாக்கி விடும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கூறுவது நிஜமாகுமா? ஊடகப் பார்வையில் முரளியின் விக்கெட்டுகள் வெறும் எண்களாக உதிரலாம். ஆனாலும் கிட்டத்தட்ட கடந்த இருபதாண்டு காலத்தின் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அவரது தாக்கம் நிச்சயமாய் என்றும் பொருட்படுத்தத் தக்க ஒரே நிஜமாக இருக்கும். கிரிக்கெட் நிர்தாட்சண்யமாக எண்களை அருங்காட்சியகத்திலும், வரலாற்றுத் தாக்கத்தை தனது இதயத்திலும் பொறித்து வைத்திருக்கிறது. முழங்கை வளைந்ததா நேரானதா என்ற சர்ச்சை காலத்தின் ராட்சத பற்களுக்குள் மாட்டிய ஜவ்வாக மட்டுமே நிலைக்கும்.
நன்றி : ஆர். அபிலாஷ்
Jul 20, 2010
Jul 19, 2010
RamaRajan
கரகாட்டக்காரன் அவருக்குக் கொடுத்த ஏற்றத்தைப் போல எந்த நடிகருக்கும் நிச்சயம் ஒரு படம் அமைந்திருக்காது. அப்படி ஒரு ஓட்டம் அந்தப் படத்துக்கு.
http://www.agaraadhi.com
ஆசிரியர்கள் மதன் கார்க்கி, கீதோ, ஷோபா, ரஞ்சனி ஆகியோர் இதன் உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளனர்.
இவ் அகராதியுடன் புதிய 20 சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Morphological Analyser எனும் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக 'மரங்களுக்கு' என அச்சடிக்கும் சொல்லுக்கும் 'மரம்' என்பதை மட்டும் பிரித்து அதன் ஆங்கில சொல்லை காட்டிவிடும்.
பிழை திருத்தம்
சொல்லின் உச்சரிப்பை ஒலித்தல்
தொடர்புடைய வேறு சொற்கள்
தொடர்புடைய திருக்குறள்கள்
வரைபடம்
என பல சேவைகள் இதில் அடக்கம்!
இவற்றை விட நீங்கள் அர்த்தம் தேடும் பெயர்ச் சொற்களின் சிறிய புகைப்படங்களும் (குறிம்படம்) இணைக்கப்பட்டுள்ளன. சுட்டியை குறிம்படத்தின் மேல் வைத்தால் அறிய முடியும்.
அத்துடன் சில சொற்களுக்கு தமிழ் திரைப்பாடல்களின் வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை விட அகராதியில் 6000+கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 999999999999999999 வரை உள்ள எண்களுக்கான தமிழ்ச் சொற்களை இவ் அகராதியில் காணலாம்.
ஏற்கனவே இத்தமிழ் கணிம ஆய்வகத்தினால், பல்வேறு தகவல் சேவைகள் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. Multdimedia முதல் Education வரை அவற்றில் அடங்கும்! தமிழ்க் கணனியியலிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் இக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ள இப்புதிய முயற்சியான தமிழ் இணைய அகராதி, ஆங்கிலம் - தமிழ் மொழிமாற்று சேவையை ஆரோக்கியமாக கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறது
Jul 16, 2010
ஏழை மக்கள்
இந் நிலையில் கேரளா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களில் ஏழைகள் மிக மிகக் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மிகக் குறைந்த ஏழைகள் உள்ள மாநிலங்களில் முதல் 10 இடங்களில் தமிழகம், உத்தராகண்ட், மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன. Tnks - Thatstamil
இந்திய ரூபாய்
டாலர், யூரோ, யென் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த மதிப்பு மிகுந்த நாணய வரிசையில் தற்போது இந்திய ரூபாயும் சேருகிறது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மும்பை ஐஐடியில் படித்தவரான உதயக்குமார் என்பவர்தான் இதற்கான சின்னத்தை வடிவமைத்துள்ளார்.
தண்டையார்பேட்டையில் வசித்து வரும் உதயக்குமார் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தர்மலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி. சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும்.
உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லீ சாட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்-2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.
அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. ஆய்வையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார். கடும் போட்டிக்கு மத்தியில் உதயக்குமாரின் டிசைன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைனைத்தான் நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடுத்து உலகம் முழுவதும் இது பரவப் போகிறது.
இந்த பெரும் கெளரவம் குறித்து உதயக்குமார் கூறுகையில், என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்.
ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன். போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.
உதயக்குமார் குவஹாத்தி ஐஐடியில் உதவிப் பேராசிரியராக இன்று பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Jul 15, 2010
Rupee, the Indian currency, is all set to have a symbol like the dollar, the pound or the yen.
The five-member jury set up to finalise symbol for the rupee is said to have selected IIT-ian D Udaya Kumar's design, said The Indian Express.
The jury has now recommended the design to the Cabinet for approval, which is likely to take a decision in this matter on Thursday.
'The rupee will retain its Indian character with an international flavour. Kumar's design (in the picture) is an amalgam of the Devanagari 'Ra' and the Roman capital 'R' without the stem, very much in line with what Finance Minister Pranab Mukherjee had envisioned', the newspaper said.
D Udaya Kumar, who was one of the five finalists whose designs had been shortlisted for final approval, was hopeful of winning the Rupee symbol design contest.
Speaking to rediff.com in January he said that there was an underlying common element in all the five designs that were short-listed. Most of the developed countries have a symbol for their currencies and it is important for a country for India too to have a symbol for the Rupee.
Udaya Kumar's design, said The Indian Expressreport, was based on the Tricolour and 'arithmetic equivalence'. 'While the white space between the two horizontal lines gives the impression of the national flag with the Ashok Chakra, the two bold parallel lines stand for 'equals to', representing balance in the economy, both within and with other economies of the world,' the newspaper reported.
"It was a challenge to design the symbol for the rupee. I made sure that it is simple, easy for a common man to understand, write and recollect," he said.
Thanks - Rediff
Jul 14, 2010
Creative Art
If you look carefully, you’ll be able to recognize bunch of animal shadows. What is even more interesting, is the fact that the author had to be very creative to think of this, and manage to integrate all the shapes, for them to fit perfectly. If I’m correct, this effect was first discovered by M. C. Escher.
Jul 13, 2010
எம்.டி.வாசுதேவன் நாயர்
இவர் திரைக்கதையை கையிலெடுத்த போது, தன்னுடைய உணர்ச்சிகரமான நாவல்கள் மூலம் பெரும் புகழ் பெற்றிருந்தார். மாத்ருபூமி வார இதழில் துணை ஆசிரியராகவும் இதழியல் முகம் காட்டிய இவர், மலையாளத் திரையுலகு கண்ட உச்ச நட்சத்திர எழுத்தாளர் என்றால் அது மிகையில்லை.
ஏறத்தாழ நாற்பது வருடம் எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத் திரையுலகில் நட்சத்திர நடிகர்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் இருந்தார். ஆட்சி நடத்தினார்.
மலையாளத் திரையுலகில் இரண்டு தலைமுறை நடிகர்கள் அவரது கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார்கள். இரண்டு தலைமுறை இயக்குநர்கள் அவரது கதையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
எம்.டி. மலையாளத் திரையுலகில் ஒரு சமகால வரலாற்று நிகழ்வு என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மலையாளத் திரையுலகை திரும்பிப் பார்க்கையில் முக்கியமான படங்களாக நூறு படங்களைப் பட்டியலிட்டால் முப்பது படங்கள் எம்.டி. எழுதியவையாக இருக்கும். இன்றைய மலையாளத் திரை ரசனை என்பதே எம்.டி.யால் படிப்படியாக வளர்த்து எடுக்கப்பட்ட ஒன்றுதான் என்பது மூத்த மலையாள சினிமா விமர்சகர்களின் கருத்து.
இவருக்குப் பிறகு பத்மராஜன் போன்ற முத்திரை பதித்த திரைக்காதாசிரியர்கள் வந்தாலும் இவரது இடத்தை இன்றுவரை நிரப்ப ஆள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியத் திரைகதைக்கு புதிய புதிய உத்திகளை பரிசளித்த இவர் , இத்தனை முதுமையிலும் கடந்த ஆண்டு கமல் நடிக்க இருந்த நான்கு மொழிப் படத்துக்கு கதை திரைக்கதை எழுதினார். - Tnks 4Tamil
Most expensive sportsperson
Indian captain Dhoni has signed a whopping Rs 200 crore endorsement deal with a company.
Tendulkar's three-year deal with sports management, signed in 2006, was worth Rs 180 crore.
Currently, Dhoni is the country's most expensive sportsperson and is associated with 22 brands.
Paul Octopus
After successfully predicting the winners of the World Cup, Paul the octopus is set to retire.
The oracle octopus correctly predicted Spain would win the World Cup by picking food out of a box with Spain's flag on it -- choosing it over the food in a Netherlands box.
Paul, who resides in a Sea Life aquarium in Oberhausen, Germany [ Images ], received death threats for his predictions, with some soccer fans taking to Twitter to suggest calamari recipes he could be used in.
"I bet every Dutch person wants a Paul the Octopus sushi roll right now," Twitter user Shibuya_Enjin said Monday.
PETA Germany has called for Paul to be released into the wild.
"It is extremely thankless, imprisoning the intelligent octopus in order to use it as an oracle," marine biologist Dr. Tanja Breining of People for the Ethical Treatment of Animals said in a release on the PETA Germany website.
Although his prediction days are over, Paul won't completely retire. Sea Life spokesman Tanja Munzig said he will "do what he likes to do best: Play with his handlers and delight children," the Daily Mailnewspaper reported.
With a perfect eight on eight record, Paul was only wrong once -- he incorrectly said Germany would beat Spain in the UEFA [ Images ] European Football Championship finals.
He was given a replica World Cup trophy Monday for his perfect streak of correct predictions during that tournament.
Sadly, nobody had no answer to the most important question: How did paul do it?
"From a rational point of view I have no explanation why Paul had a one hundred percent hit rate during the World Cup. I think mathematicians found out that 0.0 something percent was the likelihood of Paul being right. I have no idea," said Sea Life spokeswoman Tanja Munzig.
"Maybe it's his nine brains, maybe he is just a soccer expert. Only Paul knows."
Image: Germany's oracle octopus Paul swims in front of a mock World Cup trophy at the Sea Life Aquarium in Oberhausen.
Photograph:Wolfgang Rattay/Reuters - Thanks rediff
Jul 12, 2010
பதட்டத்தைக் குறைக்க ஸ்வீட்டான பானங்களை பருக வேண்டும்-நிபுணர்கள்
குறிப்பாக பணிப்பளு அதிகம் இருக்கும்போதும், கடினமான வேலையைச் செய்யும்போதும் இதுபோன்ற பானங்களை அவ்வப்போது அருந்தினால் பதட்டம் குறைந்து, விவேகத்துடன் செயபல்பட முடியும் என்பது இவர்களது கருத்து.
கோபம் அதிகம் இருந்தாலும், எதற்கெடுத்தாலும் மற்றவர்களுடன் விவாதம் புரிபவர்களாக இருந்தாலும் அவர்களையும் சரி செய்து விடுமாம் இந்த இனிப்பான பானங்கள்.
சர்க்கரையில் உள்ள சக்தி பூஸ்டர்கள், மூளையை நிலையாக வைத்திருக்க உதவுகிறதாம். இதனால்தான் கோபம், பதட்டம் குறைந்து நார்மல் ஆக அது வழிசெய்கிறது என்பது இந்த நிபுணர்களின் முடிவு.
இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்தை உளவியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதற்காக சிலரைத் தேர்வு செய்தனர். அவர்களில் சிலருக்கு இனிப்பு அதிகம் நிறைந்த எலுமிச்சம் பானத்தைக் கொடுத்துள்ளனர். சிலருக்கு செயற்கை இனிப்பு கலந்த பானத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களில் இயற்கையான இனிப்பு அதாவது சர்க்கரை கலந்த பானத்தை அருந்தியவர்கள், செயற்கையான இனிப்பு கலந்த பானத்தை அருந்தியவர்களை விட சிறப்பாக செயல்பட்டனராம்.
இந்த பானங்களைப் பருகியவர்களுக்கு பதட்டமான சில வேலைகளையும் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு வேலையின்போதும் அவர்களின் ரியாக்ஷனை கவனித்து வந்தனர்.
சர்க்கரை கலந்த எலுமிச்சம் பானத்தை அருந்தியவர்கள், பெரிய அளவில் டென்ஷன் ஆகவில்லை. நிதானத்தோடு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய குழுவைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அன்ட் க்வீன்ஸ்லேன்ட் பல்கலைக்கழக உளவியல் நிபுணர்கள் கூறுகையில், ஒரு கடினமான அல்லது பதட்டம் நிறைந்த, குறிப்பாக சூப்பர்வைசர் போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கு இதுபோல இனிப்பான பானத்தைக் கொடுக்கும்போது அவர்களின் மூளை அதிர்வுகள் ஸ்திரமடைந்து அவர்களை ஆக்கப்பூர்வமாகவும், நிதானமாகவும் சிந்திக்க வைக்கிறது. இதற்குக் காரணம் இந்த சர்க்கரைதான்.
இந்த உத்தியை குடும்ப உறுப்பினர்களும், டிரைவிங் போன்ற பணிகளில் ஈடுபடுவோரும் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றனர்.
சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் அதில் உள்ள குளுகோஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும், இதனால் பதட்டமடைவோம் என்ற கருத்தும் கூட கிட்டத்தட்ட தவறானது என்பதை இது நிரூபித்துள்ளது.
உண்மையில் நமது மூளையின் அமலாக்கப் பகுதியை சிறப்பாக வைத்திருக்க குளுகோஸ் உதவுகிறது என்பதை இந்த ஆய்வின் முடிவு புரிய வைக்கிறது.-Tnks Thatstamil
பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு
உலக கால்பந்து போட்டிகள் எவ்வளவுக்கு பிரபலமோ அந்தளவுக்கு எட்டு முறை சரியாக ஆருடம் கூறி அசத்திய பால் ஆக்டோபஸும் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் இந்தமுறை உலக கோப்பையின் உண்மையான வெற்றியாளர் பால் ஆக்டோபஸ் தான் என்று கூறமளவுக்கு அதன் வெற்றிபெறும் அணி பற்றிய எட்டுக் கணிப்புக்களும் பிசகவில்லை. இறுதிக் கணிப்பான ஸ்பெயின் வெற்றி பற்றியதும் சரியாக அமைந்த போது பால் ஆக்டோபஸ் அதன் தொட்டிக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. தற்போது உலகின் அதிகமானோர் விரும்பப்படும் பிரபலமான கடல் விலங்கினமாக பால் ஆக்டோபஸ் மாறியுள்ளது. தங்களது கடல் எல்லையில் தான் பால் ஆக்டோபஸ் பிடிக்கப்பட்டது என இத்தாலி உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது. மேலும் ஸ்பானியாவின் தொழிலதிபர் ஒருவர் பால் ஆக்டோபஸை 30,000 ஈரோக்கள் வரை செலுத்தி வாங்குவதற்கு தயாராக இருக்கின்றார். ஜேர்மனியில் சர்ச் ஒன்றில் நெதர்லாந்து வெற்றி பெறுவதன் மூலம் பால் ஆக்டோபஸின் கணிப்புக்கள் பிழையாக வேண்டுமென பெருமளவில் பிரார்தனைகளை மேற்கொண்டனர். ஆனால் ஸ்பானிய பிரதமரோ பால் ஆக்டோபஸ் எங்கள் நாட்டின் ஒரு முக்கிய சின்னமாக இருக்கவேண்டுமெனவும் அதனை பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று கோரினார். ஆனால் எவற்றிற்கும் அசராத பால் ஆக்டோபஸ் தொடர்ந்தும் தனது வாழ்நாளை Oberhausen உள்ள கடல்வாழ் உயிரினங்களின் காப்பகத்திலேயே களிக்குமென தெரிவிக்கின்றனர். அதற்கான உணவுகளை இனிமேல் நாட்டுக் கொடிகள் அடங்கிய கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்து வழங்க மாட்டார்களாம். 2010 உலக கிண்ண போட்டிகளின் மறக்க முடியாத வெற்றியாளராக பால் ஆக்டோபஸும் அனைத்து மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளது-Tnks 4tamilmedia |
Jul 8, 2010
அக்டோபஸ் ஜோசியm
இன்றைய ஆட்டத்தில் ஸ்பானியாவின் வெற்றி அந்த அணி வீரர்களின் அபாரா ஆட்டதில் கிடைத்தது என்பது ஒருபுறமிருக்க, இந்த வெற்றியை முற் கூட்டியே கணித்துச் சொன்ன அக்டோபஸ் மீனினம் ஒன்று உலகப் புகழ்பெற்று வருகிறது. ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள மீன்கள் அருங்காட்சியகத்திலுள்ள இந்த அக்டோபஸ் மீனினம், உலகக்கோப்பை ஆட்டஙகளில் இதுவரை கணித்துச் சொன்னவையெல்லாம் சரியாக அமைந்து விட, இன்றைய ஆட்டம் பற்றியும் கணிப்புப் பார்க்கப்பட்டிருக்கிறது.
அநேகமானோர், இன்றைய ஆட்டத்தில் ஜேர்மனிய அணி இலகுவாக வெல்லும் என எதிர்பார்த்திருக்க, இந்த அக்டோபஸ், ஸ்பானிய அணியே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என எதிர்வு காட்டியதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. இப்போது ஸ்பானியா வெற்றி கொள்ள அக்டோபஸ் மீனின் ஆருடம் சரிதான் என்று சொல்கின்றார்கள். பார்த்துப்பா.. ஆராச்சும் நம்ம ஊரு கிளிஜோசியக்காறரு பொட்டியோட புறப்பட்டு வரப்போறாரு...
Jul 7, 2010
விதியை துரத்திய குட்டி யானையின் கதை !!
இப்படி Luk Chai தனிக்காட்டு ராஜாவாக ஆறு மாதங்களாக வளைய வரும் போது, அவனது சித்தி Porntip இன் உடலில் பெருத்த மாற்றம் மெல்ல மெல்ல ஏற்படுகிறது. இதற்கிடையில் மெல்பன் மிருகக்காட்சிச் சாலையிலும் Mali என்ற பெண் குட்டி பிறந்து விட்டாள். ஆனால் அவள் பெண் என்பதாலோ என்னவோ கொஞ்சம் அடக்கியே வாசித்து விட்டார்கள். Porntip மிகுந்த பொறுமைசாலி என்று பெயரெடுத்தவள். தன் வயிற்றுக்குள் நூற்றுச் சொச்சம் கிலோ எடையுள்ள குழந்தையைச் சுமக்கிறோம் என்று எள்ளளவு வருத்தமோ வலியோ இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாளாம். Porntip தன் சுகமான சுமையை இறக்கும் காலமும் வந்தது. ஆனால் அதுவரை அவளுக்கு மட்டுமல்ல மிருகக்காட்சியில் விசேடமாக வரவழைக்கப்பட்ட மருத்துவருக்கும், அவரோடு அங்கே இருந்த பணியாளர் குழாமுக்கும் தெரிந்திருக்காது Porntip மிகப்பெரிய சவாலைச் சந்திக்கப் போகின்றாள் என்று.
மார்ச் 2010 ஆரம்பக் கிழமை அது. Porntip இருப்புக் கொள்ளாமல் தன் இருப்பிடத்தில் அங்குமிங்கும் அலைகிறாள். வயிற்றுக்குள் இருக்கும் தன் பிள்ளை அலுங்காமல் குலுங்காமல் வெளியே வரவேண்டும் என்ற கவலையை விட, தன் வயிற்றுக்குள் இருக்கும் வரை இதமான நிலையில் இருக்க வேண்டும் என்ற பெருங்கவலை தான் அவளைப் பீடித்தது. அதனால் ஒரு வாரகாலமாக உறக்கமற்ற இரவுகளில் கூட தன் இருப்புக் கூண்டின் இரும்புச் சட்டங்களில் தன் காலை ஒருக்களித்து வைப்பதும் பின்னர் இறக்குவதுமாக இருக்கிறாள். இதையெல்லாம் தூக்கம் தொலைத்த சிவப்புக் கண்களோடு மருத்துவர் குழாம் நேரடியாக வீடியோ கருவி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறது, அந்த அவதானம் மெல்ல மெல்லக் கவலையாக உருவெடுக்கிறது. இதற்கு மேல் பொறுமையிழந்த அவர்கள், மெல்ல எழும்பி வந்து Porntip இன் உடலைப் பரிசோதிக்கிறார்கள், அல்ட்ரா சவுண்ட் கருவி மெளன மொழி பேசுகின்றது. அந்தக் கணம் அவர்கள் உடைந்து போகிறார்கள், விரக்தியோடு ஆளையாள் பார்த்துக் கொள்ள மட்டுமே முடிகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மார்ச் 8, 2010
Taronga மிருகக்காட்சியின் பேச்சாளர் ஊடககங்களுக்குத் தன் வாயைத் திறக்கிறார். Porntip உடலில் இது நாள் வரை சுமந்து வந்த குட்டி இறந்து விட்டது என்ற அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் முதன்மைச் செய்தியாக வந்து கவலை ரேகையைப் பரப்புகின்றது. அதைவிடக் கொடுமை Porntip இன் உடலில் இருக்கும் அந்த செத்த பிள்ளையை வெளியே எடுக்க முடியாது, அது இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் அப்படியே தாயின் உடலுக்குள் சமாதியாய் இருக்க வேண்டியது தான். செத்துப் போன குட்டியை எடுக்கும் முயற்சியில் Porntip இன் உயிருக்கே உலைவைத்து விட வேண்டிய துர்பாக்கிய நிலை வந்து விடும் என்று கூட இருந்த வைத்தியர்கள் கவலையோடு சொல்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் Porntip இருப்பாளோ என்னமோ, தன் இருப்பிடத்தில் இன்னும் ஒரு அமைதி நிலையற்று துர்பாக்கியவதி போன்று அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.
மார்ச் 10, 2010
அதிகாலை மூன்று மணியைத் தொடுகிறது. இது நாள் வரை தொடர்ச்சியாக ஒவ்வோர் இரவும் மருத்துவ தீவிர கண்காணிப்பில் இருந்த Porntip களின் இற்கு இதெல்லாம் இல்லாத ஒரு இரவு. அவள் மட்டும் தன் கூட்டில் இருக்க,Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளோடு Thong Dee உம் ஒருக்களித்து ஒரே கூண்டில் படுத்திருக்கிறாள். Thong Dee இன் வால் பையன் Luk Chai நேரம் மூன்று மணியாகியும் நித்திரை வராமல் அதே கூண்டுக்குள்ளே சுற்றும் வளைய வந்து கொண்டிருந்தான். இந்த நேரம் நீச்சல் அடிக்கவும், கால் பந்து விளையாடவும் ஆட்களைத் தேடியிருப்பான் போல. Luk Chai இற்கும் சிறிது நேரத்தில் களைப்பு வந்து தன் தாய் Thong Dee இன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெருக்கமாகத் தூங்கிப் போகிறான்.
ஒரு வீடியோ கண்காணிப்புக் கருவி மட்டும் அமைதியாக இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
நேரம் அதிகாலை 3.27
Porntip தன் அரைத்தூக்கத்தை உத றிவிட்டுத் தன் கூண்டில் இருந்து வெளியே ஓடுகிறாள். கூண்டின் புறப்பகுதியில் இருந்த சதுக்கம் அது. அங்கே போனதும் தான் தாமதம் அப்படியே தன் வயிற்றில் இருந்ததைக் கொட்டுகிறாள். அந்து ஒரு சதைப்பிண்டமாக சதுக்கத்தின் குழிக்குள் போய் விழுகிறது. இது நாள் வரை மலையே சரிந்தாலும் தன் கவலை தன்னோடு என்று க ர்ப்ப உபாதையை அடக்கப் பழகிக் கொண்ட Porntip இந்தக் கணம் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு பெருங்குரலெடுத்தவாறே அழுகிறாள். சத்தம் கேட்டதும் தான் தாமதம் படுத்திருந்த யானைகள் திடுக்கிட்டு எழுந்து ஆளுக்கொரு திசையாக பிளிறிக் கொண்டே போகின்றன. Tang Mo என்பவள் மட்டும் Porntip இன் சத்தம் வரும் திசையைக் கண்டுணர்ந்து அந்தப் பக்கம் ஓடுகின்றாள். அங்கே Porntip குழியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறாள். இவளை ஆறுதல்படுத்துமாற் போல Tang Mo என்ற அந்தப் பெண் யானை பக்கத்திலேயே நிக்கிறாள். ஆனால் இருவருக்குமே அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்.
காலை புலர்கிறது. யானைப்பணியாளர்கள் இவர்களின் இருப்பிடத்துக்கு வருகிறார்கள். ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை மட்டும் அவர்களால் உணர முடிகிறது. மெல்ல மெல்லத் தயங்கி அந்தச் சதுக்கத்துக்கு வருகிறார்கள். அங்கே Porntip உம் Tang Mo நிற்கும் கோலமும் கீழே அந்தக் குழியில் ஒரு உருவம் மிதப்பதையும் பார்த்த கணம் திடுக்கிடுகிறார்கள். அந்த வயதான ஆண் உதவியாளர் உடனே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கூட வந்த அந்த இளம் பெண் பணியாளரை ஒரு துணியைச் சீக்கிரமாகக் கொண்டு வருமாறு கட்டளை இடுகின்றார். அவள் அழுதுகொண்டே ஓடிப்போய் எடுத்து வருகிறாள். முதலுதவி ஆரம்பமாகிறது, யாருக்கு? குழிக்குள் அசைந்து கொண்டிருக்கும் அவனுக்குத் தான்.
தன் தாய் Porntip பக்கபலமாக இருக்க நடந்து முடிந்த முதலுதவியும், உடனடி சக்தி மருந்தும் அவனைத் தெம்பாக்குகிறது. காலனுக்குக் கண் அடித்து விட்டு மெல்ல எழும்ப முயற்சிக்கிறான். ஆனால் உடனே முடியவில்லை. இன்னும் மெல்ல இன்னும் மெல்லெ என்று எழும்பி எழும்பி மீண்டும் விழுவதும் சறுக்குவதுமாக இருக்கிறான், ஆனாலும் விடவில்லை. தன்னை நெருங்கி வந்த சாவையே விரட்டியவன், தனக்கு மரண சாசனம் எழுதியவர்களின் நினைப்பையே மாற்றியவன் அல்லவா அவன். ஆம் மெதுவாக....ஆனால் நிதானமாக...உறுதியாக எழ ஆரம்பித்தான் ஐந்து மணி நேரம் கடந்து. மிருகக்காட்சிச் சாலைப் பணியாளர்களின் கண்கள் ஆனந்தத்தால் அல்ல ஆச்சரியத்தால் நிரம்பியதை கண்ணீரால் உறுதிப்படுத்தினார்கள். Porntip முறுவலிப்போடு தன் சிங்காரப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் வந்து வேண்டிய மட்டும் ஆசை தீரத் மடியில் பாலைக் குடிப்பதை அமைதியோடு அனுமதிக்கிறாள். 116 கிலோ குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கின்றது.
மிருகக்காட்சிச் சாலை இயக்குனர் Cameron Kerr, சொன்னார் இப்படி " his birth was set to rewrite the textbooks". மருத்துவ நிபுணர் Dr Thomas Hildebrandt (Berlin Institute for Zoo and Wildlife Health), such an outcome after a protracted labour has never been seen before" என்று சொல்லி வியக்கிறார்.
Sydney's baby elephant 'miracle': he's alive
இப்படிக்கொட்டை எழுத்துக்களில் சிட்னியின் முன்னணிப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுமளவுக்குப் பிரபலமாகி விட்டான் இவன்.
Pathi Harn என்று அவனுக்கு அவனின் தாய் வழி தேசமான தாய்லாந்து மரபுப் பெயரும் வைத்தாகி விட்டது அவன் பெயருக்கு அர்த்தமே அதிசயம் (miracle) தானாம்.
இப்பொதெல்லாம் தன் அண்ணன் Luk Chai போலவே தானும் சில விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறான். ஓடிப்பார்க்கிறான், உலாவி நடக்கிறான், தண்ணீர்த் தொட்டியில் மெல்ல ஒவ்வொரு காலாய் விட்டுப் பார்க்கிறான் ஆனால் முழுதாக இறங்கினால் மூழ்கிவிடுவோமோ என்று ஒரு கணம் தாமதித்து நிற்கிறான். பாழாய் போன பயம் மட்டும் வந்து தானாக ஒட்டிக்கொள்கிறது. Luk Chai வின் முகத்தை முகர்ந்து முட்டிப் பார்த்து நேசத்தோடு கதை பேசுகிறான்.
கண்களை அகல விரித்துக் கொண்டே தன் தாயின் மடி தரும் நிழலில் அவளோடு ஒட்டியவாறே மெல்ல நடக்கிறான் இந்த விதியைத் துரத்திய யானைக் குட்டி. - Tnks Valvan-Jeejix
Suggestion to new couples
ஈகோ
Jul 6, 2010
Shopping makes men impotent
Researchers have discovered that a chemical compound found on some cash receipts contains a hazardous substance, Bisphenol A (BPA), which suppresses male hormones in the body and can make men impotent.
The compound, used to make ink visible on thermally sensitive paper, is ingested when men handle the paper and then touch their mouths or handle food.
Frank Sommer, a Berlin-based urologist, said the substance could just affect sex hormones in men.
"A substance like that could shift the balance of sex hormones in men towards oestrogen," Sommer was quoted as saying by The Telegraph newspaper here.
"In the long term, this leads to less sexual drive, encourages the belly instead of the muscles to grow and has a bad effect on erection and potency," he said.
BPA has been linked to breast cancer, heart disease, obesity, hyperactivity and other disorders, and has been banned in Canada and a few US states.
It is widely used in tins of food and canned drinks to toughen the internal lining of the container. Most manufacturers of baby bottles have stopped putting it in their products but older stock containing the chemical is still on sale.
BPA is known as an endocrine disrupter and interferes with the release of hormones. It can affect disorders associated with metabolism, fertility and neural development. -Tnks Times
Jul 2, 2010
Bullet trains in China - 350 KM per hour
The trains, shuttle between Shanghai and Nanjing, capital of Jiangsu Province, at a speed of around 350 kilometres per hour, which is faster than a Formula one racing car, covering the 301-kilometre route in just 73 minutes.
Its 21 stops include the eight most prosperous cities in the Yangtze River Delta region, including Suzhou and Wuxi. - Tnks-Rediff