சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 25 சதவீதம் பேர்இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் 4 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். இது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர் எண்ணிக்கையில் 25 சதவீதமாகும்.
இரு ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தது. இது இப்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதில் தென் மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களே அதிகம். அதிலும் தமிழர்கள்தான் அதிகம்.
இவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் கட்டுமானப் பணி, துறைமுகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வேலைகளில் உள்ளனர்.
அங்கு சாப்ட்வேர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள், வங்கி-நிதித்துறையில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது.
சாப்ட்வேர், நிதித்துறையில் சொந்தமாத தொழில் நிறுவனம் நடத்தி வரும் இந்தியர்கள் எண்ணிக்கை 3,000 மட்டுமே.
சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவை அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Thanks - Thatstamil
No comments:
Post a Comment