Jul 12, 2010

பால் ஆக்டோபஸின் எட்டுக்கு எட்டு

AddThis Social Bookmark Button

உலக கால்பந்து போட்டிகள் எவ்வளவுக்கு பிரபலமோ அந்தளவுக்கு எட்டு முறை சரியாக ஆருடம் கூறி அசத்திய பால் ஆக்டோபஸும் பிரபலமடைந்துள்ளது.


உண்மையில் இந்தமுறை உலக கோப்பையின் உண்மையான வெற்றியாளர் பால் ஆக்டோபஸ் தான் என்று கூறமளவுக்கு அதன் வெற்றிபெறும் அணி பற்றிய எட்டுக் கணிப்புக்களும் பிசகவில்லை.

இறுதிக் கணிப்பான ஸ்பெயின் வெற்றி பற்றியதும் சரியாக அமைந்த போது பால் ஆக்டோபஸ் அதன் தொட்டிக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

தற்போது உலகின் அதிகமானோர் விரும்பப்படும் பிரபலமான கடல் விலங்கினமாக பால் ஆக்டோபஸ் மாறியுள்ளது.

தங்களது கடல் எல்லையில் தான் பால் ஆக்டோபஸ் பிடிக்கப்பட்டது என இத்தாலி உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது.

மேலும் ஸ்பானியாவின் தொழிலதிபர் ஒருவர் பால் ஆக்டோபஸை 30,000 ஈரோக்கள் வரை செலுத்தி வாங்குவதற்கு தயாராக இருக்கின்றார்.

ஜேர்மனியில் சர்ச் ஒன்றில் நெதர்லாந்து வெற்றி பெறுவதன் மூலம் பால் ஆக்டோபஸின் கணிப்புக்கள் பிழையாக வேண்டுமென பெருமளவில் பிரார்தனைகளை மேற்கொண்டனர்.

ஆனால் ஸ்பானிய பிரதமரோ பால் ஆக்டோபஸ் எங்கள் நாட்டின் ஒரு முக்கிய சின்னமாக இருக்கவேண்டுமெனவும் அதனை பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று கோரினார்.

ஆனால் எவற்றிற்கும் அசராத பால் ஆக்டோபஸ் தொடர்ந்தும் தனது வாழ்நாளை Oberhausen உள்ள கடல்வாழ் உயிரினங்களின் காப்பகத்திலேயே களிக்குமென தெரிவிக்கின்றனர்.

அதற்கான உணவுகளை இனிமேல் நாட்டுக் கொடிகள் அடங்கிய கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்து வழங்க மாட்டார்களாம்.

2010 உலக கிண்ண போட்டிகளின் மறக்க முடியாத வெற்றியாளராக பால் ஆக்டோபஸும் அனைத்து மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளது-Tnks 4tamilmedia

No comments:

Post a Comment