இன்றைய ஆட்டத்தில் ஸ்பானியாவின் வெற்றி அந்த அணி வீரர்களின் அபாரா ஆட்டதில் கிடைத்தது என்பது ஒருபுறமிருக்க, இந்த வெற்றியை முற் கூட்டியே கணித்துச் சொன்ன அக்டோபஸ் மீனினம் ஒன்று உலகப் புகழ்பெற்று வருகிறது. ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள மீன்கள் அருங்காட்சியகத்திலுள்ள இந்த அக்டோபஸ் மீனினம், உலகக்கோப்பை ஆட்டஙகளில் இதுவரை கணித்துச் சொன்னவையெல்லாம் சரியாக அமைந்து விட, இன்றைய ஆட்டம் பற்றியும் கணிப்புப் பார்க்கப்பட்டிருக்கிறது.
அநேகமானோர், இன்றைய ஆட்டத்தில் ஜேர்மனிய அணி இலகுவாக வெல்லும் என எதிர்பார்த்திருக்க, இந்த அக்டோபஸ், ஸ்பானிய அணியே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என எதிர்வு காட்டியதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. இப்போது ஸ்பானியா வெற்றி கொள்ள அக்டோபஸ் மீனின் ஆருடம் சரிதான் என்று சொல்கின்றார்கள். பார்த்துப்பா.. ஆராச்சும் நம்ம ஊரு கிளிஜோசியக்காறரு பொட்டியோட புறப்பட்டு வரப்போறாரு...
No comments:
Post a Comment