Dec 12, 2011

Robert Noyce - Intel

இன்றைய கணினித் தொழில் நுட்ப உலகில் அதிகம் பாவிக்கப்படும் ஒரு சொல் இன்டெல் (Intel). ரொபர்ட் நொய்ஸ் (Robert Noyce)


இன்றைய கணினிகள்  சிறு வடிவங்களில் உருவாகுவதற்குக்  காரணமாயிருந்தவர் எனச் சொல்வதிலும் பார்க்க, அதன் பிதாமகர் எனச் சொல்வது பொருத்தமாகவிருக்கும். 

அவருடைய 84வது பிறந்த தினத்தைதந்தை கூகிள் தன் தேடல் பக்கத்தில் இன்று சிறப்பித்திருக்கின்றது.  1927ம் ஆண்டு  டிசம்பர் 12 ந்தேதி பிறந்த இவர், ஒரு புகழ் மிகு பொறியியலாளர். 

அடிப்படையில் பொறியிலாளரான இவர் ஏனையவர்களுளோடு இணைந்து உருவாக்கிய நிறுவனம், Fairchild Semiconductor.  நுண் மின்கருவிகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்ததது.  1968ல் அவர் ஆரம்பித்த மற்றுமொரு நிறுவனம்தான், இன்றைய கணினி உலகில் தவிர்க்கப்பட முடியாத நிறுவனமாகத் திகழும் இன்ட்டெல் Inte. கணினிக்கத் தேவையான கணினிச் சில்லுகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களை உள்ளடக்கிய கணினிச் சில்லுகளை உருவாக்கும்  நுட்பத்தில்  ஏனைய எல்லா வகையான நுட்பங்களுக்கும் இதுவே அடிப்படையாக இருந்து வருவது மட்டுமல்லாது, சிறப்பானதாகவும் இருப்பது எனப் போற்றப்படுகிறது.

இவரது இந்த நுட்பச் சிறப்புக்காக,  'சிலிக்கான் பள்ளதாக்கு மேயர்  ' எனச் சிறப்பிகப்படும் நொய்சு 1990 ஜுன் 3ந் தெதி அமெரிக்காவின் டெக்சாசில் காலமானார். அவரது 84வது பிறந்ததினத்தை  கூகிள் தன் முகப்புப் பக்கத்தில் 
இன்று சிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment