1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார். அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார்.
உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான். அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.
ஸ்டைல் மன்னன்
ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது.
நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment