Dec 30, 2011



Rolling Bridge.
Next


1. Rolling Bridge (United Kingdom)
The Rolling Bridge is a type of curling movable bridge completed in 2004 as part of the Grand Union Canal office and retail development project at Paddington Basin, London.
The Rolling Bridge was conceived by British designer Thomas Heatherwick, designed by SKM Anthony Hunt with Packman Lucas, and built by Littlehampton Welding.

It is twelve meters long and opens every Friday at noon. The Rolling Bridge lets boats pass by curling up until its two ends touch.

Prev
Hangzhou Bay Bridge.
Next

Hangzhou Bay Bridge, China
The Hangzhou Bay Bridge, the longest sea-crossing bridge in the world opened in May 2008.
It is 36 kilometres long and reduces the distance between Shanghai and Ningbo by 120 km.

Thanks Rediff.com

புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள்...



சென்னை: கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள் ஆஸ்திரேலியர்கள்தான். இதுவும் சமீபத்தில் அல்ல, அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்த வழக்கத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏதோ பெருமைக்காக இந்தப் பெயரை அவர்கள் சூட்டவில்லை. தங்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவின் சின்னமாக உருவகப்படுத்த இப்படி பெயர் வைக்க ஆரம்பித்தார்களாம்.

1950ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கத்தை சுவீகரித்துக் கொண்டது அமெரிக்கா.

ஆளாளுக்கு பெயர் சூட்டுவதைத் தடுக்க, சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன.

2004- முதல்....

கடந்த 2004-ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்த், பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்த் பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

2011-ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறி வைத்து தாக்கியது. இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்துதான் 'தானே' என்ற பெயர் தேர்வு செய்து சூட்டியுள்ளது.

இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் (பர்மா). மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களின் பெயர்கள்...

முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா)

Dec 12, 2011

Robert Noyce - Intel

இன்றைய கணினித் தொழில் நுட்ப உலகில் அதிகம் பாவிக்கப்படும் ஒரு சொல் இன்டெல் (Intel). ரொபர்ட் நொய்ஸ் (Robert Noyce)


இன்றைய கணினிகள்  சிறு வடிவங்களில் உருவாகுவதற்குக்  காரணமாயிருந்தவர் எனச் சொல்வதிலும் பார்க்க, அதன் பிதாமகர் எனச் சொல்வது பொருத்தமாகவிருக்கும். 

அவருடைய 84வது பிறந்த தினத்தைதந்தை கூகிள் தன் தேடல் பக்கத்தில் இன்று சிறப்பித்திருக்கின்றது.  1927ம் ஆண்டு  டிசம்பர் 12 ந்தேதி பிறந்த இவர், ஒரு புகழ் மிகு பொறியியலாளர். 

அடிப்படையில் பொறியிலாளரான இவர் ஏனையவர்களுளோடு இணைந்து உருவாக்கிய நிறுவனம், Fairchild Semiconductor.  நுண் மின்கருவிகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்ததது.  1968ல் அவர் ஆரம்பித்த மற்றுமொரு நிறுவனம்தான், இன்றைய கணினி உலகில் தவிர்க்கப்பட முடியாத நிறுவனமாகத் திகழும் இன்ட்டெல் Inte. கணினிக்கத் தேவையான கணினிச் சில்லுகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களை உள்ளடக்கிய கணினிச் சில்லுகளை உருவாக்கும்  நுட்பத்தில்  ஏனைய எல்லா வகையான நுட்பங்களுக்கும் இதுவே அடிப்படையாக இருந்து வருவது மட்டுமல்லாது, சிறப்பானதாகவும் இருப்பது எனப் போற்றப்படுகிறது.

இவரது இந்த நுட்பச் சிறப்புக்காக,  'சிலிக்கான் பள்ளதாக்கு மேயர்  ' எனச் சிறப்பிகப்படும் நொய்சு 1990 ஜுன் 3ந் தெதி அமெரிக்காவின் டெக்சாசில் காலமானார். அவரது 84வது பிறந்ததினத்தை  கூகிள் தன் முகப்புப் பக்கத்தில் 
இன்று சிறப்பித்துள்ளது.

ரஜினிகாந்த்


1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற சாதாரண மனிதர் பெங்களூரு நகரில் பேருந்து நடத்துனராக தனது பணியை தொடங்கினார். அதற்கு முன்பு அவர் போர்ட்டராகவும் இருந்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலசந்தரின் கண்களில் சிக்கி இன்று உலக ரசிகர்கள் போற்றும் உன்னத நடிகராக உயர்ந்திருக்கிறார்.

உலகளாவிய சிறந்த நடிகர்களுள் ஒருவராக ரஜினி பார்க்கப்படுவதற்குக் காரணம் அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்வதுதான். அபூர்வராகங்களில் தொடங்கிய ரஜினியின் திரையுலக வாழ்க்கை எந்திரன் வரை 36 ஆண்டுகாலம் சினிமா வெற்றி தோல்விகளுக்கப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சில் அவரை மண்ணின் முடிசூடா மன்னனாக வலம் வர வைத்துள்ளது.

ஸ்டைல் மன்னன்

ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களில் புகுத்திய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதற்காகவே அவருக்கு ஒரு தனி ரசிகர்வட்டம் உருவானது.

நினைத்தாலே இனிக்கும், முரட்டுக்காளை, மனிதன், ராஜாதிராஜா அண்ணாமலை,தளபதி உள்ளிட்ட படங்களும், இன்றைய எந்திரன் வரை ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனத்திற்காகவே தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் இருக்கின்றனர்.

Dec 6, 2011

சலூன் கடைக்காரர்

 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பெரும் தொழிலதிபர்கள், அரச பரம்பரையினர், அரசியல்வாதிகள் வாங்க முடியும், வைத்திருக்க முடியும் என்று நம்புவது இயல்பு. ஆனால், பெங்களூரை சேர்ந்த சலூன் கடைக்காரர் ரூ.3 கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காருக்கு சொந்தக்காரர் என்றால் நம்ப முடிகிறதா.

ரோல்ஸ் மட்டுமல்ல ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என மொத்தம் 67 கார்களுக்கு சாட்சாத் அவர்தான் சொந்தக்காரர்.

பெங்களூரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் 9 வயதாக இருக்கும்போத தந்தை இறந்துவிட்டார். சொத்து சுகம் என்று எதையும் இவரது தந்தை வைத்து விட்டு போகவில்லை. வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் பெங்களூர் பிரிகேட் சாலையில் உள்ள தனது தந்தையின் சலூனை வாடகைக்கு விட்டார். தினமும் 5 ரூபாய் கிடைத்தது. 

ஆனால், அந்த வருமானம் வயிற்றைக் கழுவுவதற்கே பற்றாக்குறையானது. இதனால், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பாபு படிப்பை பாதியிலேயே கை கழுவி விட்டு குடும்ப சூழ்நிலையால் முழுநேரமாக முடிதிருத்தும் தொழிலில் இறங்கினார். தொழிலை கற்றுக்கொண்ட பின்னர், கடந்த 1991ம் ஆண்டு சொந்தமாக சலூன் ஒன்றை துவங்கினார்.

சாதாராண பாபு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலில் 'பாப்புலர்' பாபு ஆனார். போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்களாக வரிசை கட்டினர். பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஆமிர்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ரமேஷ் பாபுவின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், வருமானம் உயர்ந்ததால் கடந்த 1994ம் ஆண்டு ரமேஷ் பாபு ஒரு மாருதி ஆம்னி வேனை வாங்கி வாடகைக்கு விட்டார். முடிதிருத்தும் தொழில் போன்றே டாக்ஸி தொழிலிலும் வருவாயும், பிரபலமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் தேவைக்கு தக்கவாறு தனது டாக்ஸி நிறுவனத்துக்காக பல்வேறு கார்களை வாங்கினார்.

தற்போது ரமேஷ் பாபு வசம் ரூ.3 கோடி மதிப்புடையை ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் உள்பட ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என அனைத்து நிறுவனங்களின் சொகுசு கார்களும், சாதாரண ரக கார்களும் இருக்கின்றன. மொத்தம் ரமேஷ் பாபு வசம் தற்போது 68 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நிலையில், ரமேஷ் பாபு வாழ்க்கையை மையமாக வைத்து 3 மொழிகளில் புதிய சினிமா ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆடம்பர காரையும் பில்லியனர் பாபு வாடகைக்கு விடுகிறார்.  அந்த காருக்கு ஒரு நாள் வாடகை ஜஸ்ட் ரூ.50,000 மட்டுமே.

Dec 5, 2011

Logical Beliefs: The Right Direction to Sleep

In the temple God faces mostly East. Auspicious direction is East. Marriages and all auspicious functions are done facing East. Functions connected with death rituals, significantly are done with facing South.

Reference 1&2:
The principal Gods/ presiding deities of each direction (called the ashtadikpalar) are:

Northeast- Eeshanya- Ruled by Lord of all quarters or Eeshwara Siva (Religions,Luck and Faith) 

East- Aditya- Ruled by Sun God - Aditya (Seeing the world) 

Southeast- Agni- Ruled by Lord of Fire - Agni (Energy Generating) 

South- Yama- Ruled by Lord of Death - Yama (Damaging) 

Southwest- Pitru- Ruled by ancestors (History) 

West- Varuna- Ruled by Lord of water (Physical) 

Northwest- Vayu- ruled by Lord Of Winds (Advertisement) 

North- Kubera- Ruled by Lord of Wealth (Finance) 

Centre- Brahma- Ruled by Lord/Creator of the Universe (Desire)

Dec 2, 2011

அஞ்சரைப்பெட்டியில் மருந்து


அஞ்சரைப்பெட்டியில் மருந்து இருக்கையில் அஞ்ச வேண்டாம்

Household Remedies

அடுப்பங்கரையில் உள்ள அஞ்சரைப்பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டுமல்ல உடல் நலம் காக்கும் உண்ணத மருந்தாகவும் பயன்படுகிறது. கடுகு,சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் என வகை வகையாய் இடம் பெற்றிருக்கும் அஞ்சரைப்பெட்டியை அருமருந்து பெட்டி என்றே கூறலாம்.

மஞ்சள்

நோய் எதிர்ப்பு குணம் மஞ்சளில் அதிகம் உண்டு. வயிற்றுப் புண்களை குணமாக்கும். உடலில் அடிபட்ட காயங்களில் சிறிதளவு மஞ்சளை எடுத்து பூசினால் ரணம் குறையும். சளியை போக்கும்

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பார்கள். அந்தளவிற்கு நோய் தீர்க்கும் சக்தி கடுகுக்கு உண்டு. அனைத்துவகை உணவுப் பொருளும் சமைத்து முடித்தவுடன் சுவைக்காக தாளித்து கொட்டப்படும் கடுகு விஷபேதி, வயிற்றுவலி,ஜன்னி போன்ற நோய்களுக்கு ஏற்றது.

வெந்தயம்

உடல் சூட்டை குறைக்கும். நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்

சீரகம்

உடலின் உள்ளே உள்ள நச்சுக்களை அகற்றுவதில் சீரகத்திற்கு ஈடு இணை இல்லை. இது அஜீரணம்,வயிற்றுவலி, பித்தமயக்கம் முதலிய நோய்களை போக்கும்.

மிளகு

திரிகடுகத்தில் ஒன்றாகிய மிளகு வயிற்றுக் கோளாறுகளை சீராக்கி பசியை அதிகரிக்கச்செய்யும். இது தொண்டை கமறலுக்கும், மூலரோகங்களுக்கும் ஏற்றது.

பெருங்காயம்

சாம்பார், ரசம் முதலியவற்றில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயம் வயிறு தொடர்பான நோய்களைப் போக்கும். வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு ஏற்றது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதாரணமாக இவற்றை கொடுக்கலாம்.

லவங்கம், கிராம்பு

அசைவ சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை அஜீரணத்தைப் போக்கும், வாந்தியை நிறுத்தும். thatstamil.com