Oct 19, 2010

கடிகாரம்

எஸ்.வேல்முருகன்

கண்ணாடி கூட்டிற்குள்
ஒரு காதல்
ஜோடி!
"கடிகாரம்"

அமைதிப்படை

இளங்கதிரவன்

அவரவர் கையில்
துப்பாக்கி!
-அமைதிப்படை

நாக்கு

ஏ.டி.தமிழ்மணி

தீக்குச்சி இல்லாமலே
பற்ற வைத்தது,
நாக்கு

பொம்மைகள்

பவானி கிருஷ்ணா

பூனையும் நாயும்
கொஞ்சி விளையாடுகின்றன
குழந்தையின்
கையில்
பொம்மைகள்!

அலங்காரம்

தங்க.உமாபதி

கழுத்து நிறைய நகைகள்
அழகான பட்டு புடவை
அணிந்தும் வெளியில் செல்ல
முடியவில்லை
ஜவுளிக்கடை பொம்மை.

ஆயுள் ரேகை

வீ.உதயக்குமாரன்

ஜோதிடன் தடுமாறினான்
உழைப்பாளியின் கைகளில்,
அழிந்துபோனஆயுள்ரேகை

No comments:

Post a Comment