Oct 19, 2010

கால் தடம்

உ.அருள்குமார், புதுவை

கடற்கரையில்
கவிதை!
என்னவளின்
கால் தடம்...

மழைநீர்

லெ.நா.சிவக்குமார், சென்னை

கொடுத்த தெய்வம்
கூரையைப் பிய்த்தது...
வீட்டுக்குள் மழைநீர்...

வரம்

பா.விஜயமுருகன், காரையூர்

விரல் பிடித்து
நடந்திட
வரம் கிடைத்தது...
தாய்க்குப்பின்
'காதலி'

புழுக்கம்

டி.விஜயராகவன், மழவராயனூர்

வெளியே மழை
மனதுக்குள் புழுக்கம்
ஐஸ் வியாபாரி

டாஸ்மாக் கடை

ஏ.டி.தமிழ்மணி, தளிகைவிடுதி

கோவில்
இல்லாத ஊரிலும்
'குடி' இருக்கிறது
டாஸ்மாக் கடை

ஒத்திகை

ந.சிவநேசன்

ஒத்திகை பார்க்காத
நடனம்....
குழந்தையின் நடை

முதியோர் இல்லம்

இரா.ரவி

விழுதுகள் துறந்த
ஆலமரம்,
முதியோர் இல்லம்

தண்ணீர்

கூடல்

சந்திரனில் தண் ணீர் இருக்கிறதாம்,
சந்திராயன் கண்டுபிடிப்பு,
சென்னையில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்...

நாளிதழ்

கூடல்

நடிகையின் பெரிய கவர்ச்சி படம்,
சிறிய செய்தி,
ராணுவ வீரன் வீர மரணம்...

அக அழகு

கூடல்

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

நன்றி கடன்

கூடல்

அடுத்த பிறவியில்
எனக்கு மகளாக
என் தாய்...

சகுனம்

க.சின்னத்தம்பி

குறுக்கே சென்றதால்
சகுனம் சரியில்லை!
பேருந்தில் அடிபட்டது
பூனை

திருட்டு

ஜெ.வெற்றிமுரசு

திருடு போனது...
வீட்டைக் காக்க வாங்கி வந்த
விலை உயர்ந்த நாய்

காதலர்கள்!

பி.ராதை

இரு மீன்கள்
மாட்டிக் கொண்டன
ஒரே தூண்டிலில்-காதல்

வறுமை

ஹேமலதா

நிலவில்
சாப்பிட்டோம்...
கூரை இல்லாத வீடு


No comments:

Post a Comment