Jul 19, 2010

http://www.agaraadhi.com

உலகத்தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக இணைய தளத்தில் தமிழ் - ஆங்கில அகராதியை உருவாக்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழகத்தின் Computer Science and Engineering பிரிவின், தமிழ்க் கணிம ஆய்வக குழுவினர் சேர்ந்து இவ் அகராதியை உருவாக்கியுள்ளனர். முகவரி http://www.agaraadhi.com/d/DH.jsp
ஆசிரியர்கள் மதன் கார்க்கி, கீதோ, ஷோபா, ரஞ்சனி ஆகியோர் இதன் உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளனர்.

இவ் அகராதியுடன் புதிய 20 சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Morphological Analyser எனும் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக 'மரங்களுக்கு' என அச்சடிக்கும் சொல்லுக்கும் 'மரம்' என்பதை மட்டும் பிரித்து அதன் ஆங்கில சொல்லை காட்டிவிடும்.

பிழை திருத்தம்
சொல்லின் உச்சரிப்பை ஒலித்தல்
தொடர்புடைய வேறு சொற்கள்
தொடர்புடைய திருக்குறள்கள்
வரைபடம்
என பல சேவைகள் இதில் அடக்கம்!

இவற்றை விட நீங்கள் அர்த்தம் தேடும் பெயர்ச் சொற்களின் சிறிய புகைப்படங்களும் (குறிம்படம்) இணைக்கப்பட்டுள்ளன. சுட்டியை குறிம்படத்தின் மேல் வைத்தால் அறிய முடியும்.

அத்துடன் சில சொற்களுக்கு தமிழ் திரைப்பாடல்களின் வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை விட அகராதியில் 6000+கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 999999999999999999 வரை உள்ள எண்களுக்கான தமிழ்ச் சொற்களை இவ் அகராதியில் காணலாம்.

ஏற்கனவே இத்தமிழ் கணிம ஆய்வகத்தினால், பல்வேறு தகவல் சேவைகள் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. Multdimedia முதல் Education வரை அவற்றில் அடங்கும்! தமிழ்க் கணனியியலிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் இக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ள இப்புதிய முயற்சியான தமிழ் இணைய அகராதி, ஆங்கிலம் - தமிழ் மொழிமாற்று சேவையை ஆரோக்கியமாக கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறது

No comments:

Post a Comment