Jul 12, 2010

பதட்டத்தைக் குறைக்க ஸ்வீட்டான பானங்களை பருக வேண்டும்-நிபுணர்கள்

பதட்டத்தையும், கோபத்தையும் குறைக்க இனிப்பான பானங்களை அதிகம் அருந்த வேண்டும் என்று கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

குறிப்பாக பணிப்பளு அதிகம் இருக்கும்போதும், கடினமான வேலையைச் செய்யும்போதும் இதுபோன்ற பானங்களை அவ்வப்போது அருந்தினால் பதட்டம் குறைந்து, விவேகத்துடன் செயபல்பட முடியும் என்பது இவர்களது கருத்து.

கோபம் அதிகம் இருந்தாலும், எதற்கெடுத்தாலும் மற்றவர்களுடன் விவாதம் புரிபவர்களாக இருந்தாலும் அவர்களையும் சரி செய்து விடுமாம் இந்த இனிப்பான பானங்கள்.

சர்க்கரையில் உள்ள சக்தி பூஸ்டர்கள், மூளையை நிலையாக வைத்திருக்க உதவுகிறதாம். இதனால்தான் கோபம், பதட்டம் குறைந்து நார்மல் ஆக அது வழிசெய்கிறது என்பது இந்த நிபுணர்களின் முடிவு.

இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்தை உளவியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதற்காக சிலரைத் தேர்வு செய்தனர். அவர்களில் சிலருக்கு இனிப்பு அதிகம் நிறைந்த எலுமிச்சம் பானத்தைக் கொடுத்துள்ளனர். சிலருக்கு செயற்கை இனிப்பு கலந்த பானத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களில் இயற்கையான இனிப்பு அதாவது சர்க்கரை கலந்த பானத்தை அருந்தியவர்கள், செயற்கையான இனிப்பு கலந்த பானத்தை அருந்தியவர்களை விட சிறப்பாக செயல்பட்டனராம்.

இந்த பானங்களைப் பருகியவர்களுக்கு பதட்டமான சில வேலைகளையும் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு வேலையின்போதும் அவர்களின் ரியாக்ஷனை கவனித்து வந்தனர்.

சர்க்கரை கலந்த எலுமிச்சம் பானத்தை அருந்தியவர்கள், பெரிய அளவில் டென்ஷன் ஆகவில்லை. நிதானத்தோடு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய குழுவைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அன்ட் க்வீன்ஸ்லேன்ட் பல்கலைக்கழக உளவியல் நிபுணர்கள் கூறுகையில், ஒரு கடினமான அல்லது பதட்டம் நிறைந்த, குறிப்பாக சூப்பர்வைசர் போன்ற வேலைகளில் ஈடுபடுவோருக்கு இதுபோல இனிப்பான பானத்தைக் கொடுக்கும்போது அவர்களின் மூளை அதிர்வுகள் ஸ்திரமடைந்து அவர்களை ஆக்கப்பூர்வமாகவும், நிதானமாகவும் சிந்திக்க வைக்கிறது. இதற்குக் காரணம் இந்த சர்க்கரைதான்.

இந்த உத்தியை குடும்ப உறுப்பினர்களும், டிரைவிங் போன்ற பணிகளில் ஈடுபடுவோரும் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றனர்.

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் அதில் உள்ள குளுகோஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும், இதனால் பதட்டமடைவோம் என்ற கருத்தும் கூட கிட்டத்தட்ட தவறானது என்பதை இது நிரூபித்துள்ளது.

உண்மையில் நமது மூளையின் அமலாக்கப் பகுதியை சிறப்பாக வைத்திருக்க குளுகோஸ் உதவுகிறது என்பதை இந்த ஆய்வின் முடிவு புரிய வைக்கிறது.-Tnks Thatstamil


No comments:

Post a Comment