Jul 23, 2010

விமானத்தை விடவும் வேகமாக ஒரு கார் !



2012ம் ஆண்டில் விமானத்தை விட வேகமாகச் செல்லக் கூடிய கார் பரீட்சார்த்தம் பார்க்கப்படும் என அறிய வருகிறது. இங்கிலாந்துக்காரர் தலைமையில், ஒரு குழு இதன் முன் முயற்சியாக மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி பரீட்சார்த்தம் பாரத்திருந்தனர். ஜெட் விமான என்ஜினைக் கொண்டு, “பால்கான்” ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்தக் கார் விமானத்தை விட வேகமாக மணிக்கு 1600 கிலோ மீட்டருக்குமான வேகத்தில் செல்லும். சுருக்கமாகச் சொல்லின் பார்முலா-1 கார் பந்தயத்துக்கு பயன்படுத்திய காரை விட 180 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும்.

ஆய்வுபணிகள் முடிந்து வடிமைக்கும் பணி தொடங்கியிருக்கும் இந்தக் கார் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைறிய பின், 2012-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சோதனை ஓட்டம் நடைபெறுமெனவும் தெரியவருகிறது...4tamil...


No comments:

Post a Comment