Jul 22, 2010

நிக் லீ

நிக் லீ என்ற 15 வயது சிறுவன் ஒருவன் தயாரித்த சிறிய பிளாஸ்லைட் என்ற ஐபோன் அப்ளிகேஷன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தை இலாவகமாக ஏமாற்றினான்.
பிளாஸ் லைட் என்ற அப்ளிகேஷன் ஐபோனின் ஸ்கீரினை விரும்பிய வர்ணத்தில் மாற்றி வைத்திருக்க உதவுவதாகும். இதை தயாரித்து 0.99 டாலர்களுக்கு ஆப்பிள் ஸ்டோரில் விற்பனை செய்து வந்தான் நிக் லீ.

இது ஒரு சாதாரண அப்ளிகேஷன் தான் என ஆப்பிள் நிறுவனமும் இதை விற்பனை செய்ய முதலில் அனுமதித்தது. பின்னர் நிக், ஐபோனில் இணையத்தை இலவசமாக உபயோகிக்க உதவுவதற்காக அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கோடிங்க் பற்றி அறிவித்ததும் பிளாஸ்லைட்டின் விற்பனை பன்மடங்கு அதிகரித்தது.

விழித்துக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் அதன் விற்பனையை உடனடியாக தடைசெய்தது.

ஏனெனில் கணனியுடன் சேர்த்து இணையத்தை உபயோகிக்க மேலதிகமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 20 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த விதிமுறையை உடைத்து தனது திறமையில் இலவச இணைய சேவையை ஏற்படுத்தி அதை ஆப்பிள் நிறுவன ஆன்லைன் ஸ்டோரிலேயே விற்பனை செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை அதை வாங்க முந்திக் கொண்டவர்கள் இலவசமாக இணையத்தை பயன்படுத்துவார்கள். - Tnks 4tamil


No comments:

Post a Comment