Sep 22, 2011

பெர்லினில் வலம் வந்த டிரைவர் இல்லாமல் செல்லும் தானியங்கி கார்


பெர்லினில் வலம் வந்த டிரைவர் இல்லாமல் செல்லும் தானியங்கி கார்



Automatic Car
டிரைவர் இல்லாமல் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் செல்லும் தானியங்கி காரை ஜெர்மனியை சேர்ந்த பிரபல பல்கலைகழக நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சமீபத்தில் இந்த கார் டிரைவர் இல்லாமல் சாலைகளில் வலம் வந்து அனைவரையும் அசத்தியது.

கம்ப்யூட்டர், செயற்கோளுடன் இணைந்த ஜிபிஎஸ் சிஸ்டம், கேமரா, சென்சார்கள் உள்ளிட்ட பல ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இந்த கார் டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது.

எதிரி்ல் வரும் வாகனங்கள், பாதசாரிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்களை அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார்கள் மூலம் உணர்ந்து கொண்டு காரில் உள்ள பிரத்யேக கம்ப்யூட்டர் இந்த காரை வெகு அழகாக இயக்குகிறது.

இதைவிட ஒருபடி மேலேபோய், சாலையில் உள்ள சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தால் கார் உடனடியாக நின்றுவிடுகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிய துவங்கியதும் அழகாக கிளம்புகிறது.

70 மீட்டருக்கு முன் வரும் வாகனங்கள் மற்றும் இதர பொருட்களை கண்டுபிடித்து அதற்கு ஏற்றவாறு தனது பாதையில் அழகாக வளைந்து நெளிந்து செல்கிறது இந்த தானியங்கி கார். மேலும், எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை செயற்கைகோள் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்துகொண்டு சரியான பாதையில் செல்கிறது.

சோதனை அடிப்படையில் இந்த காரை இயக்கி பார்த்ததாக, இந்த கார் வடிவமைப்பு திட்டத்தின் தலைவர் ரவுல் ரோஜஸ் கூறினார்.இதேபோன்று, டொயோட்டோ ரோபோட்டிக் பிரையஸ் காரை கூகுள் நிறுவனம் அண்மையில் பரிசோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment