Sep 5, 2011

நிக்கோபார் பழங்குடியின தலைவருக்கு தனது கோட்டைக் கொடுத்து நிலத்தை வாங்கிய நேரு


நிக்கோபார் பழங்குடியின தலைவருக்கு தனது கோட்டைக் கொடுத்து நிலத்தை வாங்கிய நேரு

Cricket Scores
Only Test , Queens Sports Club, Bulawayo
Pakistan won by 7 wickets

Jawaharlal Nehru with daughter Indira Gandhi

டெல்லி: நிக்கோபார் தீவில் விமான நிலையத்திற்குத் தேவையான கூடுதல் நிலத்தைக் கொடுத்த பழங்குடியினர் தலைவருக்கு தனது கோட்டைப் பரிசாக கொடுத்தார் ஜவஹர்லால் நேரு என்ற சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது.

வரலாற்றாசிரியர் டாக்டர் திலக் ரஞ்சன் பேரா என்பவர் எழுதியுள்ள "A journey through Nicobars" என்ற நூலில் இதைத் தெரிவித்துள்ளார்.

அந்த நூலில் கூறப்பட்டிருப்பதாவது:

1950களில் கார் நிக்கோபார் தீவின் பழங்குடியினத் தலைவராக இருந்தவர் எட்வர்ட் கட்சாட். கார் நிக்கோபார் தீவில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக இடம் தேவைப்பட்டது. இதற்காக எட்வர்டை அதிகாரிகள் அணுகி நிலம் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி நிலத்தைப் பெறுவதற்காக பிரதமராக இருந்த நேரு, அவரை டெல்லிக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். நேருவே கூப்பிட்டதால் மகிழ்ச்சியுடன் டெல்லி வந்தார் எட்வர்ட்.

அப்போது விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் நேரு. நேருவே வாய் விட்டுக்கேட்டதால் மறுக்க முடியவில்லை எட்வர்டுக்கு.

அப்போது நிக்கோபார்வாசிகளிடம் ஒரு பழக்கம் இருந்தது. காலம் காலமாக இருந்து வந்த பழக்கம் அது. அதாவது தங்களிடமிருந்து ஒரு பொருளை இன்னொருவருக்குத் தருவதாக இருந்தால் பதிலுக்கு அவர்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கிக் கொள்வார்கள்.

அந்தப் பழக்கப்படி நேருவிடம் தனது நிலத்தைத் தருவதாக ஒப்புக் கொண்ட எட்வர்ட், அதற்குப் பதிலாக நீங்கள் அணிந்துள்ள கோட்டைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேருவும் சிரித்தபடியே கொடுத்தால் போச்சு என்று கூறி கோட்டை கொடுத்தார்.

ஏதோ பெருமளவில் பணம் கேட்பாரோ என்று அனைவரும் திக் திக்கென இருந்த நேரத்தில் கோட் மட்டும் போதும் என்று எட்வர்ட் கேட்டதும், அதற்கு உடனே நேரு சரி என்று கூறியதும் அங்குகூடியிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. இப்போது உள்ளது போல நில கையகப்படுத்தும் சட்டம் அது, இது என்று எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல் ஒரு கோட்டுக்கு நிலத்தைக்கொடுத்த அந்த விஷயம் மிகவும் வியப்பானது.

நிக்கோபார்வாசிகளிடம் பணம் குறித்து ஒருபோதும் வெறி இருந்ததில்லை. உண்மையில் அவர்கள் பணத்தைப் பெரிதாகவே நினைப்பதில்லை. அவர்களிடம் தேங்காய், பன்றிகள் உள்ளிட்டவைதான் நிறைய இருக்கும். அவற்றைக் கொடுத்துதான் பிற பொருட்களை வாங்கிக் கொள்வர் என்று கூறியுள்ளார் பேரா.

எட்வர்டின் இந்த செயலைப் பாராட்டி 1989ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துக் கெளரவித்தது.

பின்னர் நேருவின் பேரனானா ராஜீவ் காந்தி நிக்கோபார் தீவுக்குச் சென்றபோது எட்வர்ட் வீட்டுக்கும் சென்றார். ஆனால் தனது தாத்தாவின் கோட் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டு ஏமாற்றமடைந்தார். பின்னர் தனது கோட்டை எட்வர்ட் குடும்பத்தினரிடம் கொடுத்தார். ஆனால் அது பின்னர் வந்த சுனாமி தாக்குதலில் சிக்கி காணாமல் போய் விட்டது.

சுனாமியில் அந்த கோட் அடித்துச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு எட்வர்ட் வீட்டுக்குப் போயிருந்த பேரா, அந்த கோட்டைப் புகைப்படம் எடுத்து அதை எட்வர்ட் குடும்பத்தினரிடம் கொடுத்தார்.

No comments:

Post a Comment