பேஸ்புக்கை வீழ்த்தும் முயற்சியில் கூகுள்பிளஸ் இன்னமும் வேகமாக பயணிக்க தொடங்கியுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
கூகுள் பிளஸ் பற்றி குழப்ப நிலையில் இருப்பவர்களுக்காக The Google+ Start-UP Guide எனும் விளக்கப்படங்களுடனான வழிகாட்டி ஒன்றை Saidur (Cy) Hossain எனும் தனிநபர் ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது புரிந்துகொள்ள இலகுவாக இருப்பதாக அதன் பயணாளர்கள் சொல்லி வருகின்றனர்.
இதேவேளை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியன 1000 நாட்களுக்கு மேலாக கஷ்டப்பட்டு சம்பாதித்த 20 மில்லியன் யூசர்களை, வெறும் 24 நாட்களில் கூகுள் பிளஸ் சம்பாதித்துவிட்டதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட பல தகவல்களையும், பேஸ்புக்கை கேலி செய்யும் கிஃப் அனிமேஷன் காட்சிகளையும், தன்னை விளம்பர படுத்தி கொள்வதற்காக வேண்டுமென்றே கூகுள் பிளஸ் உருவாக்கிவிட்டிருக்கலாம் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம், கூகுள் பிளஸுக்கு, பேஸ்புக்கே விளம்பரம் கொடுத்திருந்த சம்பவம் ஒன்று இன்னமும் வேடிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
அப்ளிகேஷன் டெவலப்பர் மைக்கேல் லீ ஜோன்சன் என்பவர், பேஸ்புக்கிற்கு கொடுத்த தனியார் விளம்பரம் ஒன்றில்,உங்களிடம் கூகுள் பிளஸ் அக்கவுண் இருந்தால் என்னையும் இணைத்து கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்தார். கூகுள் பிளஸை விட வேகமாக பிரலமாக தொடங்கியது இந்த பேஸ்புக் விளம்பரம்.
இது பேஸ்புக் நிர்வாகத்தின் காதுக்கு எட்ட, அவருடைய பேஸ்புக் அக்கவுண்டையே குளோஸ் பண்னிவிட்டார்கள். ஆனால் அதற்குள் 1500 க்கு மேற்பட்டோர் ஜோன்சனின் கூகுள் பிளஸில் இணைந்து விட்டார்கள்.
கூகுள் பிளஸால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர் பேர்க் எப்படி மனமுடைந்து போயிருப்பார் என சித்தரிக்கும் நகைச்சுவை வீடியோ ஒன்றும் யூடியூப்பில் வெளிவந்து சக்கை போடு போடுகிறது.
பேஸ்புக்கின் ஐடியாவை திருட்டித்தான் கூகுள் பிளஸ் இவ்வளவு வேகமாக முன்னேற முடிந்ததாக பேஸ்புக்கின் தீவிர பிரியர்கள் சொல்லிவருவதிலும் தவறில்லை.
என்னதான் கூகுள் பிளஸ் - பேஸ்புக் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதில் குளிர் காய்வது என்னவோ நமது பயனாளர்கள் தான். - Thans 4tamilmedia.com
No comments:
Post a Comment