Feb 23, 2012

வாகன விபரங்களை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் சேவை

வாகன விபரங்களை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் சேவை: மத்திய அரசு துவக்கம்


வாகன பதிவு விபரங்களை  எஸ்எம்எஸ் மூலம் மொபைல்போனிலேயே தெரிந்து கொள்ளும் புதிய சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன்மூலம், திருட்டு  மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டுபிடுக்க முடியும்.

வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில், வாகன விபரங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய எஸ்எம்எஸ் சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது.09212357123 என்ற மொபைல் எண்ணுக்குvahan>space<சம்பந்தப்பட்ட வாகன பதிவு எண்ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்.

அடுத்த ஒரு சில வினாடிகளில் பதில் எஸ்எம்எஸ் மூலம் வாகனத்தின் விபரம் நம் மொபைல்போனுக்கு வந்து விழுகிறது. அதில், உரிமையாளர் பெயர், வாகனம் எந்த ரகத்தை சேர்ந்தது, வரி காலாவதி ஆகும் விபரங்கள் உள்ளன.

இதன்மூலம், சேவையின் மூலம் திருட்டு வாகனத்தை வெகு எளிதாக கண்டுபிடித்துவிடலாம். கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் விபரங்களையும் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2003ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களாக இருந்தால், அந்த வாகனம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஒரு முறையாவது சென்றிருந்தால் அந்த வாகனங்களின் விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம் போலி டாக்குமென்ட் மூலம் விற்பனைக்கு வரும் வாகனங்களையும், சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். - Thatstamil.com