Jan 12, 2012

மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!


மகிழ்ச்சியா இருக்க இடதுபக்கம் தலைவைத்து படுங்க!




உறக்கம் என்பது நாள்தோறும் உழைத்து களைத்த உடலுக்கு அளிக்கும் ஓய்வு தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருகின்றன.

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது.

அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். எந்த திசையில் தலைவைத்து படுப்பது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறக்கமும் திசைகளும்

கிழக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால், ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பானோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியை தருமாம்.

மேற்கு திசையில் தலைவைத்துப் படுப்பவர்கள் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு வந்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை தருமாம். மாமியார் வீட்டில் தங்கும் மகிழ்ச்சியைத் தருவது தெற்கு திசை. ஆனால் வடக்கில் தலை வைத்து உறங்குவது நல்லதல்ல என்கின்றன சாஸ்திரமும், விஞ்ஞானமும்.

காந்த ஈர்ப்பு விசையானது வடக்கில் தலை வைத்து உறங்குபவர்களின் ஓய்வினை குறைத்து விடுகிறதாம். எனவேதான் வடக்கு திசை ஆகாது என்கின்றனர்.

நோயாளிகளுக்கு ஏற்ற திசை

நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவில் குணம் பெற கிழக்கு திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மேற்கு பரவாயில்லை, தெற்கு திசை ஆயுள் பெருகும். வடக்கு கூடாது என்று மருத்துவ நூலில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க

உறங்கும் போது இடது பக்கமாக திரும்பி படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.

படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் இடது பக்கம் திரும்பி தூங்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சியாகவும், நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கின்றனர். வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட கையாள்வதுடன், அதிக மன உறுதியுடன் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது.

அதிகம் சம்பாதிக்கலாம்

வலது பக்கம் திரும்பி தூங்குபவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மோசமான மனநிலை ஏற்படுவதால் தூக்கத்தில் அடிக்கடி எழுவதாகவும் கூறினர். இதற்கிடையில், இடப்பக்கம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தாலும், வலப்பக்கம் தூங்குபவர்கள் அதிகம் சம்பாதிக்க முற்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

கவிழ்ந்து படுக்க கூடாது

கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
Thanks-Thatstamil.com

Jan 9, 2012

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆ.ரஹ்மானுக்கு விருதுகள் தேடி வந்த வெற்றிகதை!


உலகத்தண்மை கொண்ட தன் இசைக்காக, ஆஸ்கர்விருதை வென்று முதல் முறையாக வெற்றி கொண்டு
தமிழினத்துக்கும் இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்த ஆஸ்கர் தமிழனுக்கு இன்று 46 வது பிறந்த நாள்.

எங்களின் தங்கமகன்  ஏ.ஆர்.ரகுமான் என்று  உலகத் தமிழினமே ஒரு குரலாய் வாழ்த்தும் இந்த இனிய நாள். பால்மனம்  மாறாத பால்ய பருவத்திலேயே இசைத்தாய் தத்தெடுத்துக் கொண்ட தவப்புதல்வன் ஏ.ஆர்.ரகுமான். இன்று அதிக எண்ணிகையில்  சர்வதேச விருதுகள் பெற்ற ஒரே இந்தியன் என்ற பெருமையையும் எட்டியிருக்கும் யாரும் எட்டமுடியாத இசை உயரத்தை ரஹ்மான் எட்டியது எப்படி!?...

இந்திப்படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை... தமிழ்பாடல்களுக்கும் தலையசைக்க வைத்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்றால், அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.  இன்று உலக மக்களை தனது இசையால் வசப்படுத்தியிருக்கும் ரகுமானின் தமிழ் பாசத்தை என்னென்று சொல்வது....!

விருது விழா மேடையில் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என்று தமிழில் பேசி முடித்த  ரஹ்மானின் சாதனைப்பயணம் தொடர்கிறது.

கடந்த 1966-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப்குமார். ரகுமானின் தந்தை சேகர், மலையாள படவுலகில் மரியாதைக்குறிய இசையமைப்பாளராக திகழ்ந்தவர்.  தாயர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்.

ரகுமாணுக்கு 9 வயதாக இருந்தபோதே தந்தையை இழந்தார் இந்த இசையின் மைந்தன். தந்தையின் மரணத்தைவிட துக்க கரமாக இருந்த்து திலிப்குமார் குடும்பத்தின் வறுமை. அப்பா சேர்த்து வைத்து விட்டுபோன சொத்தாக வீடு முழுவதும் நிறைந்து கிடந்தன இசைக்கருவிகள். அந்த இசைக்கருவிகளை ஒவ்வொன்றாய் விற்று,  வாடகை கொடுக்க வேண்டிய நிலையைக் கண்டு உள்ளம் புழுங்கிய ரகுமான் தனது இளவயது நண்பர்களான டிரம்ஸ் சிவமணி, ஜான் ஆண்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து கீபோர்ட் பிளேயராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.  

சினிமா இசைக்கச்சேரிகளில் சின்னஞ்சிறு இளைஞனாய் கீஃபோர்டு வசித்து விட்டு ரகுமான் வாங்கிவரும் தொகை 125/- ரூபாய். பள்ளிக்கு துள்ளிச் செல்ல வேண்டிய வயதில் வீட்டுக்காக மேடையேறிய ரகுமானை உச்சி முகர்ந்தார்  அவரது அம்மா!

கச்சேரிகளுக்கு கீஃபோர்டு வாசித்துக்கொண்டே மாஸ்டர் தனராஜிடம் இசைப்பயின்ற ரகுமான்,  பதிமூன்று வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே இளையராஜாவின் அன்புக்கு பாத்திரமானார்.

பின்னர்  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு,  ஜாகீர் உசேன்,  குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் என இசைமேதைகளோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்கள் வரிசையாக கிடைக்க ஒவ்வோரு வாய்ப்பையும் இசையைக் கற்றுகொள்ளும் இடமாக மாற்றிக்கொண்டார்.
கற்றுக் கொள்வதில் இன்றும் தாகம் தனியாத ரஹ்மான் இளமையைக் கொண்டாட வேண்டிய வயதில் அமைதியான இளைஞனாக அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார், இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, திலிப்குமர் என்ற தனது பெயரை ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார்.

1992ஆம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கியமான தருணம். தொலைகாட்சி மற்றும் வானொலி வர்த்தக விளம்பரங்களுக்கான ஜிங்கிள்ஸ் மெட்டுகளை அமைத்துக்கொடுத்து , அந்தத்துறையில் தனி முத்திரை பதித்து வந்த ரஹ்மான் தனது வருமாணத்தில் சிறிது சிறிதாக பணம் சேர்த்து தனது 25 வயதில் தனக்கென்று சொந்தமாக இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோவை தொடங்கினார்.
தனது வீட்டுக்குப் பின்னாலேயே தொடங்கிய  இந்த ஸ்டியொவுக்கு ‘பஞ்சதன்- ரெக்கார்ட் இன்’ என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார்.

இன்று ஹாலிவுட் தரத்துக்கு இணையான இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோக்கள், சர்வதேச இசைப்பள்ளி ஆகியவற்றை சென்னையில் அமைத்துள்ளார். அவரது இசைப்பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமல்ல, மாநகராட்சிப்பள்ளியில் படிக்கும் ஏழைமாணவர்களும் படிக்கிறார்கள் இலவசமாக.  
1991... ஜிங்கிள்ஸ் இசையில் முத்திரை பதித்துக்கொண்டிருந்த ரகுமானை யாருடைய சிபாரிசும் இல்லாமல் அழைத்தார் இந்தியாவின் இணையற்ற இயக்குனர்களில் ஒருவரான   மணிரத்னம். அதுவரை பெரிய இயக்குனர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த மணிரத்னம் ‘ரோஜா’ படத்துக்கு ரகுமானின் இசை, பின்னனி இசையை பயன்படுத்திக்கொண்டார்.


முதல் வாய்ப்பை மிகச்சரியாகப்  பயன்படுத்திக்கொண்ட ரகுமான் தனது கம்போஸிங் திறமைகளை ரோஜா படத்தில் வெளிபடுத்தி இந்திய பாரம்பரிய இசையின் வேர்களையும், உலக இசையின் ஜீவனையும் கலந்து, ஒரு புத்தம் புது இளைய இசையை கொடுத்தார். ரகுமானை தமிழகம் மட்டுமல்ல,  மொத்த இந்தியாவும் யார் இந்த இளைஞன் என்று கேட்கவைத்தது.  ரோஜாவின் இசை கோடான கோடி ரசிகர்களையும், கூடவே  தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு ரகுமானின் இசைப்பயணம் புயல் வேகத்தில் புறப்பட்டது. 1997ஆம் ஆண்டு இசையமைத்த மின்சாரக் கனவு,  2002ஆம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக மீண்டும்  தேசிய விருதுகள் தேடி வந்தன.
இன்று ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இந்த இசைப்புயல் மட்டுமே.

ரோஜாவுக்கு பிறகு தமிழ்திரையில் மட்டுமின்றி, இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரகுமான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிக்கொடி கட்டினார்.

இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குஸ்ஸார், மேஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரகுமான்.  அதேபோல முன்னணி இயக்குனர் மணிரத்ணம்  முதல் அறிமுக இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வரை  ஈகோவுக்கு துளியும் இடமில்லாமல் தரமான இசை என்பதை மட்டுமே நோக்கமாக்க் கொண்டு பணியாற்றிய வரும் இறை நம்பிகையாளர் இந்த ரகுமான்.
இவர் எட்டும் உயரங்களுக்கு சிகரம் வைத்தது போல தற்போது ஹாலிவுட் ஜாம்பவன் ஸ்டீவன் பீல் பெர்குடன் இணைந்து பணியாற்றி, இசை ஆல்பங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இந்த இசைபுயல்! தொடரட்டும் அவரது சாதனைகள்.. தமிழர்களின் வாழ்த்துக்களுடன்!  Thanks to http://www.4tamilmedia.com