Jun 30, 2010

குலதெய்வம்

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். மதம் இருக்கிறது. மதத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதியில் பிரிவு இருக்கிறது. சில ஜாதியில் ஆந்தைக் கூட்டம் என்று அதில் ஒரு பிரிவு இருக்கும். அந்த ஜாதியிலேயே 4 பிரிவு இருக்கும். ஒவ்வொரு ஜாதியிலுமே நான்கைந்து பிரிவுகள் உண்டு. ஆனால், இந்த நான்கைந்து பிரிவுகளையுமே ஒற்றுமைப்படுத்துவதுதான் இந்தக் குலதெய்வம். பல ஜாதிகள் இருக்கிறது. அதில் கருப்பசாமியை வணங்குகிறவர்கள் என்று தனியாக இருக்கிறார்கள் இல்லையா, அதைப்போல், இவர்களில் நான்கு, ஐந்து பிரிவு இருக்கிறது. ஆனால் கிடா வெட்டும் போது எல்லோரும் ஒரே பிரிவுதான்.

அடுத்து, குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம்.

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.

எவ்வளவோ பேர் எங்கெங்கோ போய் வருகிறார்கள். காசிக்கு ஒருவர் போய்விட்டு வந்தார். அவருடைய கனவில் வந்து, ஏண்டா நான் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். மூன்று வருடமா என்னை வந்துப் பார்க்காமல் எவ்வளவோ செலவு செய்து கொண்டு அங்கெல்லாம் போய்விட்டு வருகிறாயா? என்னை நீ பார்க்காமல் போன பிறகு உனக்கு காசி போனால் பலன் கிடைக்குமா? என்று கனவில் வந்து கேட்டிருக்கிறது. பிறகு ஓடிப் போய் வணங்கினார்.

அய்யனார், முனீஸ்வரர், வேடப்பர், கருப்பு இந்த எல்லை தெய்வங்கள் நேரடியாகவே கனவில் வந்து பேசக்கூடியதெல்லாம் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். வசதி வாய்ப்பு இழந்தவர்களும் பெரிய கோபுரங்கள் உள்ள கோயில் தெய்வங்களை குலதெய்வம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒருவர் வந்தார். குழந்தையே இல்லை என்றார். குலதெய்வக் குறைபாடு இருக்கிறது, போயிருக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், எங்களுக்கு குலதெய்வம் திருப்பதிதான் என்று சொன்னார். கண்டிப்பாக திருப்பதி கிடையாது. மரத்தடியில் இருக்கிற பெண் தெய்வம்தான் உங்களுக்கு குலதெய்வமாக வருகிறது என்று சொன்னேன். அவருடைய பாட்டியும் வந்திருந்தார்கள். அவர் சொன்னார், இவன் பொய் சொல்கிறான் தம்பி, எங்களுக்கு ஆரணிக்கு பக்கத்தில் பச்சையம்மன் என்கிற குலதெய்வம் இருக்கிறது. வேப்ப மரம் இருக்கும். நடுவில் நான்கு கல் இருக்கும். அவ்வளவுதான். ஒருதடவை கூட்டிக் கொண்டு போனேன். இதெல்லாம் கல் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான். இனிமேல் திருப்பதிதான். குழந்தை பிறந்தால் முதல் மொட்டை திருப்பதிக்குதான் என்று அடம் பிடிக்கிறான். இதை குலதெய்வம் என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னான். நீங்களாவது கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

இப்படியெல்லாம் குலதெய்வத்தில் கூட பேஷன் பார்க்கிறவர்கள், அதைகூட பெருமையாக புகழ்பெற்ற கோயிலாக சொல்லிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவருக்கு 7 வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. அங்கு சென்று அருகில் இருக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து உங்கள் விளை நிலத்தில் இருக்கக்கூடிய நெல்லை எடுத்து பொங்கல் வைத்து வணங்குங்கள் என்று் கூறினேன்.

இதெல்லாம் அறிவியல் ரீதியாக நமக்கு என்னவென்று தெரியாது. பொங்கல் வைத்த 60வது நாள் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. புகழ்பெற்ற டாக்டர்கள் பெயரெல்லாம் சொன்னார். எங்கெங்கேயோ போனேன். டாக்டர் இந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் என்று எனக்குத் தெரியவே தெரியாது என்று அழுதுவிட்டார். குலதெய்வத்திற்கு அவ்வளவு சக்தியா சார், இப்பவும் சொல்கிறேன், நாலு மரம், நாலு கல்லு சார். எப்படி சார் அது என்று கேட்டார்.

அப்படியில்லீங்க, முன்னோர்கள் கூடி கூடி வழிபட்ட அந்த இடத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. இன்றைக்கு நாம் சொல்லவில்லையா? காந்தி நின்ற இடம், வ.உ.சி. செக்கிழுத்த இடம் என்று எவ்வளவு பெருமையாகச் சொல்கிறோம். அதுபோல நம் முன்னோர்களும் நமக்குத் தலைவர்கள் மாதிரிதானே. அவர்கள் நின்று வழிபட்ட இடம். அவர்கள் பொங்கல் வைத்தது. அதெல்லாம் நாம் மதிக்க வேண்டாமா? அதனால் குலதெய்வத்திற்கு சக்தி உண்டு. குலதெய்வம் என்பது என்ன? தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்கூடியதுதான் குலதெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் வேண்டித்தான் கூப்பிட வேண்டும். இவர்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் நம்மிடம் வந்து நமக்கு நல்லது செய்யக்கூடிய தெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட
எல்லாம் நமக்கு கிடைக்கும்.Tnks-Webdunia

மிளகா‌ய்

இதய நோ‌ய் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌‌ழி‌வி‌லிரு‌ந்து உ‌ங்களை‌க் கா‌‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? அ‌ப்படியானா‌ல் உ‌‌ங்க‌ள் உண‌வி‌ல் அ‌திகமாக ‌மிளகா‌ய் வகைகளை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இ‌னி, ‌மிளகாயை உண‌வி‌ன் அழகு‌க்கு‌ம், கார‌த்‌தி‌ற்கு‌ம் ம‌ட்டு‌ம் பய‌‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி வ‌ந்ததை மா‌ற்‌றி‌க் கொ‌‌ள்வோ‌ம், நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு‌ம் அவை பய‌ன்படு‌கி‌ன்றன எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்வோ‌ம்.

webdunia photo
WD
இ‌ந்‌தியாவை‌ப் பூ‌ர்‌வீகமாக‌க் கொ‌ண்ட ஆ‌ய்வாள‌ர் மரு‌த்துவ‌ர் ‌கிர‌ண் அஹூஜா தலைமை‌யி‌ல் இது கு‌றி‌த்து ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்வு‌க் குழு‌, ‌நீ‌ரி‌‌ழிவை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ஆ‌ற்றலு‌ம், கா‌ர்டியோ வே‌‌ஸ்குல‌ர் என‌ப்படு‌ம் இதய நோ‌யி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்று‌ம் ஆ‌ற்றலு‌ம் ‌‌மிளகா‌ய்‌க்கு இரு‌ப்பதை க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

இவ‌ர்களது ஆ‌ய்‌வி‌ல் மு‌க்‌கியமான இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, ‌மிளகா‌யி‌ல் இரு‌க்கு‌ம் ச‌த்துக‌ள், ர‌த்த‌த்‌தி‌ல் குளு‌க்கோ‌ஸ் இரு‌ப்பதையு‌ம், இ‌ன்சு‌லி‌ன் அளவையு‌ம் க‌ட்டு‌ப்படு‌‌த்து‌கிறது. மேலு‌ம், ர‌த்த‌ நாள‌‌ங்க‌ளின‌் சுவ‌ர்க‌ளி‌ல் கொழு‌ப்பு ‌திசு‌க்க‌ள் உருவாவதையு‌ம், குழா‌ய்களு‌க்கு‌ள் ர‌த்த உறைதலையு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்து‌கிறது.

எனவே, ஒருவ‌ர் தனது உண‌வி‌ல் எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ‌மிளகா‌யி‌ல் இரு‌க்கு‌ம் ச‌த்துக‌ள், அடு‌த்த உண‌வி‌ல் வரு‌ம் அ‌திக‌ப்படியான குளு‌க்கோஸையு‌ம், இ‌ன்சு‌‌லி‌ன் சுர‌ப்‌பிலு‌ம் அ‌திக கவன‌ம் செலு‌த்து‌கிறது. குளு‌க்கோ‌ஸ் அளவையு‌ம், இ‌ன்சு‌லி‌ன் அளவையு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்துவதா‌ல் ‌நீ‌‌ரி‌ழிவு நோ‌ய்‌ நெரு‌ங்கவே முடியாது எ‌ன்‌கிறது இ‌ந்த ஆ‌ய்வு‌க்
குழு.

வாழை‌ப்பழ‌ம்


வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அ‌ந்த கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றிலையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க் கொடு‌க்கு‌ம் முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌த் தெ‌ரியாததா எ‌ன்ன?

முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம்தா‌ன். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு.

மேலு‌ம், நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற் பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.

புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது. - Thanks Webdunia

ஹரிஹரன்

ஹரிஹரன் ஜி ஐ உலகுக்கு அறிமுகபப்டுத்திய முதல் இசை அல்பம், 'கொலோனியல் கசின்' வெளியான போது ஒருவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எங்கேயாவது மலேசியா சிங்கப்பூர் சென்றுவிடுவோமா என அவர் நினைத்த காலப்பகுதியில் திடீரெனெ பிரபலமாகத்தொடங்கியது.

இந்தியா பெற்றெடுத்த இசை வாரிசுக்களில் இவரும் ஒருவர்...

Jun 17, 2010

A Visual Explanation of SQL Joins

I thought Ligaya Turmelle's post on SQL joins was a great primer for novice developers. Since SQL joins appear to be set-based, the use of Venn diagrams to explain them seems, at first blush, to be a natural fit. However, like the commenters to her post, I found that the Venn diagrams didn't quite match the SQL join syntax reality in my testing.

I love the concept, though, so let's see if we can make it work. Assume we have the following two tables. Table A is on the left, and Table B is on the right. We'll populate them with four records each.

id name       id  name -- ----       --  ---- 1  Pirate     1   Rutabaga 2  Monkey     2   Pirate 3  Ninja      3   Darth Vader 4  Spaghetti  4   Ninja

Let's join these tables by the name field in a few different ways and see if we can get a conceptual match to those nifty Venn diagrams.

SELECT * FROM TableA INNER JOIN TableB ON TableA.name = TableB.name  id  name       id   name --  ----       --   ---- 1   Pirate     2    Pirate 3   Ninja      4    Ninja 

Inner join produces only the set of records that match in both Table A and Table B.

Venn diagram of SQL inner join
SELECT * FROM TableA FULL OUTER JOIN TableB ON TableA.name = TableB.name  id    name       id    name --    ----       --    ---- 1     Pirate     2     Pirate 2     Monkey     null  null 3     Ninja      4     Ninja 4     Spaghetti  null  null null  null       1     Rutabaga        null  null       3     Darth Vader 

Full outer join produces the set of all records in Table A and Table B, with matching records from both sides where available. If there is no match, the missing side will contain null.

Venn diagram of SQL cartesian join

SELECT * FROM TableA LEFT OUTER JOIN TableB ON TableA.name = TableB.name  id  name       id    name --  ----       --    ---- 1   Pirate     2     Pirate 2   Monkey     null  null 3   Ninja      4     Ninja 4   Spaghetti  null  null 

Left outer join produces a complete set of records from Table A, with the matching records (where available) in Table B. If there is no match, the right side will contain null.

Venn diagram of SQL left join
SELECT * FROM TableA LEFT OUTER JOIN TableB ON TableA.name = TableB.name WHERE TableB.id IS null  id  name       id     name --  ----       --     ---- 2   Monkey     null   null 4   Spaghetti  null   null 

To produce the set of records only in Table A, but not in Table B, we perform the same left outer join, then exclude the records we don't want from the right side via a where clause.

join-left-outer.png
SELECT * FROM TableA FULL OUTER JOIN TableB ON TableA.name = TableB.name WHERE TableA.id IS null  OR TableB.id IS null  id    name       id    name --    ----       --    ---- 2     Monkey     null  null 4     Spaghetti  null  null null  null       1     Rutabaga null  null       3     Darth Vader 

To produce the set of records unique to Table A and Table B, we perform the same full outer join, then exclude the records we don't want from both sides via a where clause.

join-outer.png

There's also a cartesian product or cross join, which as far as I can tell, can't be expressed as a Venn diagram:

SELECT * FROM TableA CROSS JOIN TableB 

This joins "everything to everything", resulting in 4 x 4 = 16 rows, far more than we had in the original sets. If you do the math, you can see why this is a very dangerous join to run against large tables.

Posted by Jeff Atwood